உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஐ.டி., கார்டு; குற்றங்களை தடுக்க போலீஸ் திட்டம்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஐ.டி., கார்டு; குற்றங்களை தடுக்க போலீஸ் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,:மாநிலம் முழுதும் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை, போலீசார் துவக்கி உள்ளனர்.பிப்ரவரி 4ம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்த, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார்; பாலியல் தொல்லைக்கும் ஆளானார்.இச்சம்பவத்திற்கு பின், வாடகை கார், ஆட்டோ பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், மாநிலம் முழுதும் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

2012ல், சென்னை சென்ட்ரலில், ரயில்வே போலீசார் வாயிலாக, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.தற்போது, இந்த நடைமுறையை மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அதில் இடம் பெறும் தகவல்கள் குறித்து, ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். அடையாள அட்டையில், புகைப்படம், பெயர், வீட்டு முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும்.ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதன் வாயிலாக, அவர்கள் எங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர். பயணியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rengaraj
மார் 15, 2025 15:12

மீட்டர் இல்லாத ஆட்டோ சம்பந்தமாக கீழ்கண்ட அறிவிப்பை அரசே வெளியிடவேண்டும். 1.மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ வில் மட்டும்தான் பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும். 2.அதில் அவற்றை கண்காணிக்கும்விதமாக ஜிபிஎஸ் கருவி இணைக்கப்பட்டிருக்கவேண்டும். 3.மீட்டர் இல்லாத ஆட்டோ தொலைந்தால் இதுசம்பந்தமாக எந்தவித குற்ற புகாரும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாது 4.மீட்டர் இல்லாத ஆட்டோவில் பயணம் செய்தால் விபத்துக்கான இன்சூரன்ஸ் கிடையாது 5. மீட்டர் இல்லாத ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது , பிள்ளைகள் தொலைந்தால் காவல்துறையால் புகார் பதிவு செய்யப்படாது 6.பாலியல் தொடர்பான குற்றங்களில் மீட்டர் இல்லாத ஆட்டோ சம்பந்தப்படுத்தப்பட்டால் அந்த புகாரும் காவல்துறையால் ஏற்றுக்கொள்ள படாது 7.மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோவின் நம்பர் , லைசென்ஸ் காலம், தற்போதைய ஓனர், அதன் தற்போதைய ஓட்டுநர் ஆகியவற்றை இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வசதியை அரசே ஏற்படுத்தவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ சொந்தக்காரர்கள் மேற்கூறிய விபரங்களை அவர்களே அப்டேட் செய்யவேண்டும். மேற்கூறியவை குற்றங்களை பெருமளவில் குறைக்க உதவியாக இருக்கும்.


Sivagiri
மார் 15, 2025 13:27

பாதிக்கு பாதி ஆட்டோக்கள் போலி நம்பர் , பெர்மிட் இல்லாத , ஆட்டோக்கள்தான் , எல்லாம் கட்சிக்காரங்கதான் - வட்டங்கள் , கவுன்சிலர்கள் , முதல் , மந்திரிகள் வரை , எல்லா நகரங்களிலும்தான் ஐம்பது - நூறுன்னு ஆட்டோக்கள் , வாடகைக்கு விட்ருக்காங்க , வித்தவுட் -தான் . . .


Ramesh Sargam
மார் 15, 2025 12:58

செலவுதான் .. ஒரு பிரயோஜனமும் இல்லை. தொண்ணுத்தெட்டு பர்சென்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் பொறுக்கிகள், கள்வர்கள்.


Oru Indiyan
மார் 15, 2025 08:27

போலி அடையாள அட்டைகள் இப்போதே வந்து இருக்கும்.


Kasimani Baskaran
மார் 15, 2025 07:18

யோக்கியன்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். மீட்டருடன் ஜி பி எஸ் கருவி ஒன்றை பொருத்த வேண்டும்.


Appa V
மார் 15, 2025 06:56

மது கடைகளை மூடினாலேயே குற்றங்கள் குறையும்


Kannan
மார் 15, 2025 06:53

அடையாள அட்டையால் ஒரு பிரயோஜனமும் இல்லை.