உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளில் மாசு: நீர்வளத்துறை அதிருப்தி

பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளில் மாசு: நீர்வளத்துறை அதிருப்தி

சென்னை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, நீர்நிலைகள் மாசு அடைந்து வருவதால், நீர்வளத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீர்வளத்துறை வாயிலாக, 90 அணைகள், 15,000க்கும் மேற்பட்ட ஏரிகள், 10க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும், மற்ற மாவட்டங்களில் பாசன தேவைக்காகவும், நீர்வழித்தடங்கள் துார்வாரப்படுகின்றன.இவற்றுக்கு முழுமையாக நிதி ஒதுக்குவது கிடையாது. ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி, நீர்வளத்துறையினர் பணிகளை செய்கின்றனர். வெள்ளநீர் மட்டுமின்றி, அணைகள், ஏரிகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் வெளியேறுவதற்கு, பிளாஸ்டிக், பாலிதீன், பழைய துணிகள் உள்ளிட்டவை பெரும் தடையாக உள்ளன.கடந்தாண்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, சாலைகள், மழைநீர் கால்வாய், சுரங்கப் பாதைகளில் தேங்கியிருந்த பல டன் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் அகற்றப்பட்டன.குறைந்த மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடுகளை, அரசு தடை செய்துள்ளது. தற்போது, அவற்றின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து உள்ளது. எந்த பிரச்னையும் இன்றி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியும் நடந்து வருகிறது. இதனால், நீர்வழித்தடங்களில், அவை தடையை ஏற்படுத்தி வருகின்றன. மழை காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், இவ்விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால், நீர்வளத் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ديفيد رافائيل
ஜூன் 03, 2024 12:33

Plastic ஐ government அதிகாரப்பூர்வமாக தடை செய்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இல்லையேல் இந்த மாதிரி news போட்டுகிட்டே இருக்க வேண்டியது தான்.


Raa
ஜூன் 03, 2024 11:04

"நீர்வளத்துறை அதிருப்தி" - சிரிப்புதான் வருது... உங்கள சம்பளத்துக்கு வைத்திருப்பதே இதுமாதிரி நடக்காமல் இருக்கத்தான். யாருக்கு வேண்டும் உங்கள் அதிருப்தி? அடக்குங்கள். உண்மையாக இருந்தால், தொழில் துறை பிளாஸ்டிக் தயாரித்ததற்காகவும் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குப்பையை நீர் நிலையத்துக்கு கொண்டு வர வைத்ததற்காவும் ஒரு கேஸ் போடுங்கள் பார்க்கலாம். உண்மையாக புரட்சி செய்த மன நிறைவாவது வருமே?


Siva
ஜூன் 03, 2024 10:35

இப்போது தான் தெரியுமே?? என்றைக்கு பிளாஸ்டிக் தயாரிப்பு வந்ததோ அன்றே நிர் மாசுபடுத்தும் நிலை வந்தது இதற்கு கூமூட்டை மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் படிப்பதும் ,சாப்பிட, குப்பை போட, எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்று நினைத்து இருக்கவும்


Rajasekar Jayaraman
ஜூன் 03, 2024 08:55

நீர் நிலைகளை காயவத்திடுங்கள் கனிமவளமும் அள்ளலாம் தமிழகத்தை சுடுகாடாக்கிவிடலாம் என்ன.


Sampath Kumar
ஜூன் 03, 2024 08:34

இந்தத்தண்ணீரை சுத்த படுத்தாமல் அந்த ஏரியா மக்களுக்கு சப்ளை பண்ணுரப்பொத்தான் புத்தி வரும் குடிக்கட்டும் குடித்து உடல் உபாதை வந்தாலும் திருந்த மாட்டானுக அம்புட்டு ராய் உள்ளவனுக்கு தான் இந்த மக்கள்


jss
ஜூன் 03, 2024 08:00

அதிருப்தியை சமாளிக்கத்தான் இருக்கவே இருக்கிறது லஞ்சம. அதை கொடுத்துவிட்டால் அதிருப்தியாவது மண்ணாவது.


மேலும் செய்திகள்