உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று நிமிடங்களில் முடிந்தது பொங்கல் டிக்கெட் முன்பதிவு

மூன்று நிமிடங்களில் முடிந்தது பொங்கல் டிக்கெட் முன்பதிவு

சென்னை:பொங்கல் ரயில் டிக்கெட், முன்பதிவு துவங்கிய 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தது.அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜன., 15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல். அதையொட்டி, ஜன., 10ம் தேதி விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் வாயிலாக, முன்பதிவு துவங்கிய அடுத்த மூன்று நிமிடங்களில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் இடங்கள் நிரம்பின. இந்த ரயில்களில், தற்போது காத்திருப்போர் பட்டியல் நிலையே உள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி நகரங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களின், 'ஏசி' இல்லாத சிலீப்பர் பெட்டிகளில், 3 நிமிடங்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது. பின்னர், காலை 10:00 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து விட்டது. இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன், நீலகிரி விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, 260 வரை காத்திருப்போர் பட்டிய லில் உள்ளனர். அதிகாலை, 'வந்தே பாரத், தேஜஸ்' ரயில்களை விட, மற்ற அனைத்திலும் சிலீப்பர், மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டன. ஜன., 11ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !