முதல்வர் ஸ்டாலினுடன் பிரகாஷ்காரத் சந்திப்பு
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.இருவரும் தேசிய, மாநில அரசியல் நிலவரங்கள் குறித்தும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை வலுவாக அமைப்பது குறித்தும் பேசி உள்ளனர். மேலும், ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில். தி.மு.க.,வுக்கு நான்கு இடங்கள் கிடைக்க உள்ளன. அதில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கினாலும், மீதம் 3 இடங்கள் உள்ளன. அதில் ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, பிரகாஷ் காரத் கோரிக்கை வைத்திருக்கக்கூடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.