உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை வேண்டி பிரார்த்தனை: ஹிந்து முன்னணி அழைப்பு

மழை வேண்டி பிரார்த்தனை: ஹிந்து முன்னணி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:அக்னி நட்சத்திர காலமான, 30 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அணைகளில் போதிய நீர் இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம்; வாரத்துக்கு, மாதத்துக்கு ஒருமுறை மக்களுக்கு குடிநீர் வினியோகம் போன்றவற்றை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. இதற்கெல்லாம், ஒற்றை தீர்வு மழை மட்டுமே; வேறு வழி இல்லை.சித்திரை அமாவாசையான மே 7ம் தேதி அனைத்து மக்களும் தங்கள் இஷ்ட தெய்வம், குல தெய்வம், முன்னோர்களை நினைத்து நம் பகுதியில் உள்ள அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அனைவரும் நலமுடன் வாழ, மழை மும்மாரி பொழிந்திட இறைவனை ஒன்று சேர்ந்து வேண்டுவோம். பக்தியால் இறைவனை குளிர்வித்தால், நம் மண்ணை குளிர்விப்பார் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுவோம்; மழை பெறுவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.RAMACHANDRAN
மே 07, 2024 07:09

மத வெறியர்கள் வழிபாடு செய்தான் இயற்கையாக பெய்யும் மழையும் பொழியாது


Tirunelveliகாரன்
மே 06, 2024 14:11

மத துவேஷங்களை கைவிட்டு வாழுங்கள்


Srinivasan Krishnamoorthi
மே 06, 2024 14:03

மழை பெய்தால் விளைச்சல் பெருகும் என்பதே இந்து முன்னணி அழைப்பு எல்லோரும் பிரார்த்திப்போம்


regurathi pandian
மே 06, 2024 12:08

மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எல்லா மதத்தவரும் அழைக்கின்றனர் ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்கு போதைப்பொருளை கட்டுப்படுத்த, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, பெண்களை பாதுகாக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, இயற்கையை அழிப்பதை தடுக்க, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க, மதத்தை காப்பாற்ற கூட பிரார்த்தனை செய்யாமல் போராடுகின்றனர்


rambhagavath
மே 06, 2024 12:07

அருமைஅன்னா buliding strong but basement week dialouge வருது வாயில மொதல்ல நீர்நிலைகள் தண்ணீர் இருப்பு அதிகரிக்க எல்லா நீர் தேக்கங்களையும் தூர்வார நடவடிக்கை எடுங்க, மழை சேமிப்பு அனைத்து கட்டடங்களிலும் செயல்படுத்துங்க மழைபெய்யா நிறைய மரங்களை நடுங்க, இதை செய்தால் மழை பெய்ய உடனே பகவான் கைகொடுப்பான்தவறான வேண்டுதலை பகவான் ஏற்க்க மாட்டான்


Vathsan
மே 06, 2024 10:56

ஹிந்துக்களுக்கு மட்டும் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்திப்போம்


அப்புசாமி
மே 06, 2024 08:04

பெய்ய வேண்டிய நேரத்தில் தானே பெய்யும்.


vadivelu
மே 06, 2024 14:10

பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்யும்,


Priyan Vadanad
மே 06, 2024 08:03

பிரார்த்தனைகள் செய்தாலும் செய்யாவிட்டாலும் கோடைமழை கண்டிப்பாக வரும் பிரார்த்தனைகளால் காரியம் நடக்கிறதோ இல்லையோ மக்களிடம் ஒரு நேசமும் பாசமும் ஒற்றுமையுணர்வும் வளரும் பிரார்த்தனை செய்வோம் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒன்றிணைவோம்


Kasimani Baskaran
மே 06, 2024 05:13

நீர் வளம் சிறக்க அதிக மரங்களை நட வேண்டும் கடந்த நூறாண்டில் அழிக்கப்பட்ட காடுகளை திரும்ப உருவாக்கினால் மழையின் அளவு குறையாது மழைக்காக பிரார்த்திப்பதில் தவறில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ