உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி தெய்வப்பிறவி தேர்தல் விதியெல்லாம் தெரியாது

பிரதமர் மோடி தெய்வப்பிறவி தேர்தல் விதியெல்லாம் தெரியாது

வேலுார் : ''பிரதமர் மோடி ஒரு தெய்வப்பிறவி; அவர் தேர்தல் விதியோ அரசியல் விமர்சகர்கள் கருத்தோ, காதில் வாங்கும் நிலையில் இல்லை'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார், காட்பாடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து அறிந்தேன். இது குறித்து, அரசியல் தெளிவு பெற்றவர்கள், கருத்து தெரிவித்துள்ள பெரும்பான்மையானோர், மோடியின் செயலை குறை கூறியுள்ளனர். காரணம் அவர், தியானம் செய்வது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜூன் 1ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது, அந்த தேர்தலில் 'இம்பேக்ட்' ஏற்படுத்தக்கூடும். இது தேர்தல் விதியை மீறிய செயலாகும். ஓட்டு கேட்கும் போது மதத்தையோ, அதற்கான செய்கையையோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்து ஓட்டு கேட்கக்கூடாது என்பது உத்தரவு. ஆகவே, இதுபோன்று மக்களிடம் மறைமுகமாக பிரசாரம் செய்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். எதையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. காரணம் அவர் மனிதனாக இருந்தால் காதில் விழும்; அவர் தெய்வப்பிறவி. அதெல்லாம் அவருக்கு தெரியாது. தெய்வப்பிறவிக்கு உலகத்தில் ஆயிரம் வேலைகள் உண்டு. இதெல்லாம் காதில் விழுந்திருக்காது.மேகதாது அணையை திட்டவட்டமாக கட்ட முடியாது என நான் சொல்கிறேன். தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. திட்டவட்டமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.அணைகள் கட்ட, பல தடைகளை கடக்க வேண்டும். ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்வர். இது ஒரு அரசியல். கேரளா, கர்நாடகா மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் கிளம்புகிறதோ, அப்போதெல்லாம் இது குறித்து பேசுவர். தேர்தலில் எல்லா கட்சியினரும் அவர்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவர். முடிவை எண்ணி பார்த்தால் தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 01, 2024 19:56

இந்த திருட்டு திராவிட வியாதிகள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், மோடிஜி அவர்கள் ஹிந்துஸ்தானை, ஹிந்துக்களை காக்க வந்த தெய்வ பிறவிதான், இன்னும் சொல்லப்போனால் சத்ரபதி சிவாஜி அவர்களின் மறுபிறவி என்று கூட சொல்லலாம். 70 ஆண்டுகாலமாக நம்மை கொள்ளை அடிக்கவந்த அந்நிய மத அடிமைகளாகத்தான் நம்மை ஆண்ட தலைவர்கள் இருந்தார்கள். தற்போது கூட தமிழகத்தில் இளவரசர் அவரது மனைவிக்காக அந்நிய மதத்திற்கு மாறினேன் என்றார்.. கட்சி , மத ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படவேண்டிய சபாநாயகர், இந்த ஆட்சி அந்நிய மதத்தினர் போட்ட பிட்சை என்று சொன்னார். ஆக திருட்டு திராவிட கலகத்தினருக்கு மோடிஜி அவர்களை குறை உள்ள வக்கில்லை.


M Ramachandran
ஜூன் 01, 2024 12:54

ஜூன் 4 பிறகு உங்களை போனற வயது மூத்த தலைவர்களை உள்ளவர்களை கட்சி பணி ??? ரிட்டைர்மென்ட் அனுப்ப போவதாக வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.


தத்வமசி
ஜூன் 01, 2024 11:13

என்னமோ இவங்க அப்படியே விதிகளை பின்பற்றுவது போல நடிக்க வேண்டியது. அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லத் தொடங்கியதே இவர்களின் காலத்தில் தான். அவ்வளவு நாற்றம். அப்பனும், பிள்ளையும் பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளனர். அடுத்தவர்களுக்கு வழி விடலாமே. அதற்கு மனமில்லை.


Subramanian N
ஜூன் 01, 2024 11:04

ஏளனம் செய்கிறீர்கள்


Rajasekar Jayaraman
ஜூன் 01, 2024 11:03

மணல் கொள்ளையனுக்கு தீகார் நிச்சயம்.


Lion Drsekar
ஜூன் 01, 2024 10:22

அதேபோன்ற காது எல்லோருக்கும் இருக்கிறது , அதைவிட மிகப்பெரிய மூலதனம் வாய் இருக்கிறது, அதை அரசியல் கட்சிகள் , போராளிகள் மட்டுமே பயன்படுத்தமுடியும் மற்றவர்கள் அயன்படுத்தினால் அதிகாலை நேரம் 2 மணிக்கு இன்னோவா காரில் வந்து வீட்டின் இரும்பு கேட்டை உடைத்திவிட்டு மிக மிக சாதாரணமாக செல்வார்கள் , இது எனக்கு நேற்றுமுன்தினம் நடந்தது . புகார் கொடுத்திருக்கிறேன் இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை,


duruvasar
ஜூன் 01, 2024 10:07

தமிழக மக்கள் நன்கறிவார்கள்.


duruvasar
ஜூன் 01, 2024 10:05

சரிதான் அய்யா. அவர் தங்களை போல் இரு முதுகலை பட்டம் பெற்ற மூதறிஞர் கிடையாது.சாதாரண சராசரி மனிதன்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2024 09:31

இன்னும் 3 நாள் தான். அப்பறம் இதே வாயீ என்ன சொல்லுது பார்ப்போம்


vbs manian
ஜூன் 01, 2024 09:24

சாதாரண பிறவிகளுக்கே தேர்தல் மற்றும் விதிமுறைகள் பொது வாழ்வில் நேர்மை நாணயம் தெரியவில்லையே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை