உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலில் ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்: மத்திய இணை அமைச்சர் முருகன்

அரசியலில் ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்: மத்திய இணை அமைச்சர் முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “அரசியலில் இருந்து ராகுல் காணாமல் போகும் நாள் விரைவில் வரும்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட இருக்கிறார். கோவிலுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை யாரால் தடுக்க முடியும். ஜெயலலிதா, தமிழகத்தில் எவ்வளவு ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு இருந்தார்; எவ்வளவு கோவில்களை பராமரித்து கும்பாபிஷேகம் செய்தார்; எத்தனை கோவில்களுக்கு அவர் சென்று இருந்தார் என, அனைவருக்கும் தெரியும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.'காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான, 370 சட்டப் பிரிவை எப்போது நீக்கப் போகிறீர்கள்' என, ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஜெயலலிதா பேசியதற்கு ராஜ்யசபாவில் ஆவணங்கள் உள்ளன. இதற்கு மேல் என்ன ஆவணங்கள் வேண்டும்?போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம், கஞ்சா; இது தான் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணம். மக்கள், 'வெல்கம் மோடி, வெல்கம் மோடி' என்று சொல்கின்றனர். தி.மு.க.,வை சார்ந்தவர்களின் பிரதமர் குறித்தான பேச்சு எந்த அளவிற்கு அநாகரிகமாக இருக்கிறது, தரம் தாழ்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.தமிழகத்தில், பா.ஜ., பெரிய வரலாற்றை உருவாக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி அதற்கான முடிவு தெரியவரும். அரசியலில் இருந்து ராகுல் காணாமல் போகும் நாள், விரைவில் வரும். ஜூன் 4ம் தேதி மக்கள் அதை பார்ப்பர்.இவ்வாறு அமைச்சர் முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
மே 31, 2024 14:45

பாஜகவில் மற்ற தலைவர்களும் பிரதமர் மோடி அவர்களைப் போலவே பேசுகின்றனர்!


Ganesh Shetty
மே 31, 2024 14:01

எப்பா ஏதோ அந்த பெரியவர் தயவில் மந்திரியாக வலம் வருகிறாய் எந்த தேர்தலிலும் நிற்காமல் இதில் ராகுல் காணாமல் போகப்போவது குறித்து பேசுவது நல்ல வேடிக்கை


A.Gomathinayagam
மே 31, 2024 13:54

யார் காணாமல் போகவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் மக்கள் மட்டுமே


jebamani
மே 31, 2024 13:23

ஜூன் 4ல் தெரியும்.யார் காணமல் போக போவதென்று ,அது வரை GODI மீடியா கும்பல் ஏதாவது சொல்லட்டும்


Indian
மே 31, 2024 12:55

யார் யாரை காணாமல் ஆக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானிப்பார் ....அது ஜூன் முதல் வாரம் தெரியும் ?


abdulrahim
மே 31, 2024 10:54

இந்தியா கூட்டணி ஆட்சி அமையட்டும் அப்புறம் இருக்கு


கத்தரிக்காய் வியாபாரி
மே 31, 2024 12:29

இன்னும் 4 நாளில் காணாமல் போகிற கூட்டணிக்கு எப்படி முட்டு கட்டி தூக்குகிறார். ஜனநாயகம் வாழ்க.


abdulrahim
மே 31, 2024 10:52

ஒட்டுண்ணி எல்போர்டு முருகா நீ எல்லாம் ராகுலை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது ????


MADHAVAN
மே 31, 2024 10:31

எல் முருகன் நீ காணாமல்போய் பல ஆண்டுகள் ஆச்சு


veeramani
மே 31, 2024 10:09

திரு பப்பு அவர்கள் ...மக்களால் கண்டுகளிக்கக்கூடிய அருமையான நடிகர். மக்களுக்கும் பொழுது போகவேண்டாமா??? அவர் கட்சியில் இருக்கிறாரா?? சீனாவின் ஒப்பந்தத்தில் இருக்கும் பப்பு இந்தியாவை விட்டு துரத்தப்படவேண்டியவர். இந்த ஆண்டு அவருக்கு நன்மை பயக்காது


abdulrahim
மே 31, 2024 10:50

உண்மையிலேயே மோடிதான் பப்பு என்று தெரிஞ்சி போச்சுடா


Sampath Kumar
மே 31, 2024 08:44

முதல நீ இருக்கியா பாரு அப்புறம் அடுத்தவனை பற்றி பேசு


மேலும் செய்திகள்









புதிய வீடியோ