உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் குறித்த ரஜினி விமர்சனம்; ஸ்டாலின் சொல்லி நடந்தது: முனுசாமி

துரைமுருகன் குறித்த ரஜினி விமர்சனம்; ஸ்டாலின் சொல்லி நடந்தது: முனுசாமி

கிருஷ்ணகிரி: கருணாநிதி குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி விமர்சித்து பேசியது முதல்வர் ஸ்டாலின் சொல்லியே நடந்திருக்கிறது என அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் ஒரு நடிகர். தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சிலரை சந்தோஷப்படுத்த கருத்துக்களை கூறுவார். அதுபோலத்தான் கருணாநிதி குறித்த புத்தக வெளியீட்டு விழாவிலும் பேசியுள்ளார். அமைச்சர் துரைமுருகனை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர், அ.தி.மு.க.,வில் சேராமல், தான் தலைவராக ஏற்றுக்கொண்ட கருணாநிதியுடன் தி.மு.க.,விலேயே இருந்தார்.தி.மு.க.,வில் மூத்த நிர்வாகி, இரண்டாம் நிலை தலைவரான அவரை விமர்சித்து, ரஜினி பேசுவதை மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்பட அனைவரும் மகிழ்ந்து சிரிக்கிறார்கள் என்றால், துரைமுருகன் குறித்து தான் பேசமுடியாததை, ரஜினிகாந்தை வைத்து ஸ்டாலின் பேச வைத்துள்ளார் என்பதைதான் காட்டுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, அடுத்த கட்ட தலைவராக ஸ்டாலினை உருவாக்கினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை அடுத்த தலைவராக்க முயல்கிறார். கருணாநிதிக்கு இவர்கள் மட்டும் தான் விழா எடுக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அவரது தொண்டர்கள் விழா எடுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 26, 2024 21:35

யார் சொல்லி என்ன நடந்ததோ, ஆகமொத்தத்தில் ஏதோ விஷயம் நடக்குது. எதுக்கும் திமுகவில் உள்ள பழைய ஸ்டூடெண்ட்ஸ் மிக ஜாக்கிரதையாக இருக்கவேணும். எந்த புத்தில் என்ன பாம்பு இருக்குமோ, யார் கண்டார்கள்?


Kannan
ஆக 26, 2024 20:47

முதல்வர் வேட்பாளர்கள் ஆவார்கள் என்று நினைத்த செந்தில் பாலாஜி,பொன்முடி அழுத்தம் கொடுத்தவர்கள் உள்ளே தள்ளியது மு க ஸ்டாலின் .துரைமுருகனுக்கு முதல்வர் பதவியில் ஆசை என்று தற்போது ரஜினியை வைத்து அழுத்தம் கொடுக்கிறார் மு க ஸ்டாலின் .வேறு சீனியர் அமைச்சர்கள் தி மு க வில் கிடையாது. கட்சியும் உடையாது. ரஜினி தி மு க விற்கு எம் ஜி யார் கட்சி எதிரி என்பதால் மற்றும் சொத்தை காப்பாற்றுவதற்காக ஆதரவு கொடுக்கிறார் .அதற்காக கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஆதரவு தெரிவிப்பது அவரின் நீண்ட கால மரியாதையை கெடுத்துவிடும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை