உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி; பழனிசாமிக்கு துாது அனுப்பிய ராமதாஸ்

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி; பழனிசாமிக்கு துாது அனுப்பிய ராமதாஸ்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்த பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., வழங்குவது குறித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டது. வெற்றியோ, தோல்வியோ தேர்தலுக்குப் பின், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என, பா.ம.க.,வின் கோரிக்கையை ஏற்று, தேர்தலில் கூட்டணி தோற்ற பின்பும், ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது. ஆனால், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை கைகழுவி விட்டு, எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க., https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hf5gp1ze&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலிலும் பா.ம.க., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும் ஜூலை 24ல் முடிகிறது. இம்முறை அ.தி.மு.க., ஆதரவு இருந்தால் மட்டுமே, அவரால் மீண்டும் எம்.பி.,யாக முடியும். இந்நிலையில், கடந்த 17ம் தேதி சேலத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, ஜி.கே.மணி சந்தித்துப் பேசினார். உறவினர் இல்லத் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சந்தித்தாக கூறப்பட்டது. ஆனால், மகனை மீண்டும் எம்.பி.,யாக்க, ராமதாஸ் அனுப்பிய துாதராகவே, ஜி.கே.மணி பழனிசாமியை சந்தித்தார் என பா.ம.க., தரப்பில் கூறுகின்றனர். ஜி.கே.மணியிடம் மனம் விட்டு பேசிய பழனிசாமி, 'கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்திருந்தால் குறைந்தபட்சம் தர்மபுரியில் பா.ம.க.,வும், கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.,வும் வென்றிருக்கும். விழுப்புரம், சிதம்பரத்திலும் வென்றிருக்கலாம். இரு கட்சிகளுக்கும் ஓட்டு சதவீதமும் அதிகரித்திருக்கும். 2019 போலவே இப்போது, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்திருப்போம்' என தெரிவித்துள்ளார்.பழனிசாமியின் கருத்தை ஆமோதித்த ஜி.கே.மணி, 'முடிந்ததை பற்றி பேசி பலனில்லை. வரும் சட்டசபை தேர்தலில் சேலம் உள்ளிட்ட வடக்கு, மேற்கு பகுதிகளில் பா.ம.க.,வின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். எனவே, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்தால், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி இப்போதே உறுதி செய்யப்பட்டு விடும்' என தெரிவித்துள்ளார். பிடி கொடுக்காத பழனிசாமி, 'அ.தி.மு.க.,வுக்கு இரண்டு ராஜ்யசபா இடங்கள் மட்டுமே கிடைக்கக் கூடிய சூழ்நிலையில், ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, தே.மு.தி.க.,வுக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டியிருக்கும். மிகப் பெரிய இயக்கமான அ.தி.மு.க., தரப்பில் ஒரு சீட்டுக்காவது போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கு உள்ளது. கட்சி சார்பில், நிறைய பேர் ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கும் நிலையில், கிடைக்கப் போகும் ஓரிடத்தையும் பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுத்தால், கட்சிக்குள் வீண் குழப்பம் ஏற்படும். அதோடு, கட்சிக்கென லோக்சபாவில் எம்.பி.,க்களே இல்லாத நிலையில், ராஜ்யசாபாவுக்கு செல்லும் வாய்ப்பையும் பறிகொடுக்க கட்சியினர் விரும்பமாட்டார்கள். அதனால், இப்போதைக்கு வாய்ப்பில்லை; ஸாரி' என்று சொல்லியுள்ளார். இருந்தபோதும், பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்தபின், பா.ம.க.,வின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, 'ஜெயலலிதா இல்லாவிட்டால், 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்காது' என புகழ்ந்துரைத்து பேசினார். இது அ.தி.மு.க.,வினரை சந்தோஷப்பட வைத்திருக்கிறது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Haja Kuthubdeen
பிப் 22, 2025 16:30

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அஇஅதிமுகவிடம் பாமக கூட்டணி அமைத்திருந்தால் 10தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு...எந்த நோக்கத்தின் அடிப்படையில் கூட்டணி போட்டார்களோ அது நிறைவேறவில்லை.இனியாவது ஐயா அவர்கள் தெளிவான முடிவு எடுக்கனும்.அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைக்கனும்.


kulandai kannan
பிப் 22, 2025 11:39

இதெல்லாம் ஒரு பிழைப்பு !!


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 22, 2025 16:38

இந்த மேங்கோ பாய்ஸ்களுக்கு பதவி வேண்டும் என்றால் வெட்கம் மானம் எல்லாத்தையும் விட்டு விடுவார்கள்.


தேச நேசன்
பிப் 22, 2025 10:03

தற்போதைய தமிழக அரசியல் கூவத்திற்கு நிகரானது என்று சான்றோர் கூறுவர், அதனுடைய உச்சபட்ச்சம் மருத்துவர் ஐயா. மக்களாட்சி தத்துவம் கேலி கூத்தாக்கப்படுவதில் தமிழகம் முன்னோடி. அரசியல் கட்சி நடத்துவதிலும் தேர்தல் கமிஷன் சட்ட திட்டங்களை கொண்டு வந்து சரி செய்யவில்லை என்றால் இந்திய மக்களாட்சி மேன்மை அடையாது. முக்கியமாக ஒரு கட்சி ஒரே குடும்பத்தின் கீழ் வருவதை தடுக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும், தலைமையை தீர்மானிப்பது அந்த கட்ச்சியின் உரிமை என்பதை மாற்றி, தேர்தல் கமிஷன் மேர்பார்வையில் உள்கட்சி தேர்தல் நடத்தி தலைவர் தேர்ந்தெடுக்க பட வேண்டும். ஒருவர் ஒரு முறை தலைவராகிவிட்டால் அவரோ அவர் குடும்பத்தினரோ மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இந்த சீர்திருத்தம் மிக அவசியம். இல்லை என்றால் ஊழல் ஒழிந்து மக்களாட்சி மேம்பட வாய்ப்பே இல்லை.


தமிழ் நிலன்
பிப் 22, 2025 07:01

என்ன தான் வன்னியர் வன்னியர் என்று பேசினாலும் பதவி பணம் என்று வந்துவிட்டால் அது டாக்டர் ஐயா குடும்பத்துக்கு தான். வயல் வன்னியருக்கு விளைச்சல் டாக்டருக்கு.


முக்கிய வீடியோ