உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் மானியம் ரூ.750 கோடி அரசு பாக்கி

ரேஷன் மானியம் ரூ.750 கோடி அரசு பாக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.இந்த மானியம் குறித்த காலத்தில் வழங்கப்படுவதில்லை. அதனால், செலவுகளை சமாளிக்க முடியாமல், சங்கங்கள் நிதி நெருக்கடியில் திணறி வருகின்றன.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:

ரேஷன் கடை செலவுகளுக்காக கூட்டுறவு துறைக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 450 கோடி ரூபாயை, அரசு மானியமாக வழங்குகிறது. அரசு விடுவிக்கும் மானியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது.கடந்த, 2021 - 22 மானியத்தில், 3 சதவீதம்; 2022 - 23ல், 51 சதவீதம்; 2023 - 24ல், 40 சதவீதம் நிலுவை என, 750 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.இந்த நிதியை அரசு விடுவிக்காமல் தாமதம் செய்வததால், ரேஷன் கடை வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல், சங்கங்கள் திணறி வருகின்றன. எனவே, நிலுவையில் உள்ள மானிய தொகையை விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கௌதம்
செப் 08, 2024 07:22

எதாவது ஒரு மக்கள் திட்டத்திற்கு நிதி பாக்கி இல்லாம இருக்கா? கார் பந்தயம் நடத்தவும், அப்பனுக்கு சிலை வைக்கவும் தான் பைசா பாக்கி இல்லாமல் கொடுங்கிறானுக


Svs Yaadum oore
செப் 08, 2024 07:04

நிலுவையில் உள்ள மானிய தொகையை விரைந்து வழங்க வேண்டுமாம் ....சட்டியில் நிதி இருந்தால்தானே அகப்பையில் வரும் ??....ஆசியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கும் விளையாட்டு போட்டி நடத்தி 250 கொடிகள் செலவு .... ....அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வெளி நாடு முதலீடுகள் தொடர்பாக பேசுவாராம் ....இந்த நேரத்தில் ரேஷன் மானியம் ரூ.750 கோடி அரசு பாக்கி என்று புலம்பிகிட்டு ....


Kasimani Baskaran
செப் 08, 2024 06:47

ஒரு கடைக்கு ஆண்டுக்கு ரூ 13.6 லட்சம் மானியம் என்றால் மிக அதிகம். கொள்ளை லாபம் பார்ப்பார்கள் போல.


அருணாசலம்
செப் 08, 2024 08:19

கணக்கு தப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை