உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உச்சவரம்பு நிலத்தை விடுவிக்க மறுப்பு: கட்டுமான துறையினர் காத்திருப்பு

உச்சவரம்பு நிலத்தை விடுவிக்க மறுப்பு: கட்டுமான துறையினர் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியார் உச்சவரம்பு நிலங்களை விடுவிப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், புதிய கட்டடங்கள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் 1961ல் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, தனியாரிடம் இருந்த கூடுதல் நிலங்கள், அரசுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டன.இவ்வாறு அறிவிக்கப்பட்ட மிகை நிலங்களை, அரசு துறைகள் உரிய முறையில் கையகப்படுத்த தவறிவிட்டன.எனவே, மிகை நிலங்களை, பழைய உரிமையாளர்களே பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த நிலங்களை, பல்வேறு பாகங்களாக வாங்கி, பொதுமக்கள் பயன்படுத்த துவங்கினர்.இந்த நிலங்கள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு பட்டா மாறுதல், கட்டுமான திட்ட அனுமதி, வங்கிக்கடன் பெறுதல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது.அதனால், உச்சவரம்பு நிலங்களை வரன்முறை செய்யும் திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 1994 டிசம்பர் 31க்கு முன் கிரையம் பெறப்பட்ட நிலங்கள், குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் வரன்முறை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.இதில், 2012க்கு பின் வரன்முறை பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டன. இதனால், தகுதி இருந்தும் தாங்கள் வாங்கிய நிலங்களுக்கு, வரன்முறை சலுகை பெற முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதிப்பு

சென்னை உள்ளிட்ட நகரங்களில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. பிரதான பகுதிகளிலேயே சில நிலங்கள் உச்சவரம்பு சட்டத்தில் மிகை நிலங்களாக உள்ளதால், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடிவதில்லை. இதற்கான வரன்முறை திட்டத்தை திருத்தி அமைத்து, மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சலுகை, நடுத்தர மக்கள், சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த பேருதவியாக இருக்கும்.- பி.மணிசங்கர், தலைவர், தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gajageswari
ஜூன் 01, 2024 05:59

காலத்திற்கு ஒவ்வாத நில உச்சவரம்பு சட்டம், விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்ய சட்டம் லஞ்சம் வாங்கவே பயன்படும்


Gajageswari
மே 31, 2024 21:27

காலத்துக்குக் ஒவ்வாத தனது குறிக்கோளை அடைய முடியாத 1.நில உச்சவரம்பு சட்டம் 2. விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு நீக்க வேண்டும்


ஆரூர் ரங்
மே 31, 2024 11:07

19எழுபது வாக்கில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் தனிநபர் மொத்தம் ஐந்து லட்சத்துக்கு கீழே மட்டுமே சொத்து வைத்திருக்க முடியும் என்ற உச்சவரம்பு விதிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. இப்போ அது கவுன்சிலரின் மாத கிம்பளம். சதுர கம்பெனி பற்றி அறிந்தவர்கள் உச்சவரம்பு என்றாலே சிரிக்கிறார்கள்.


Suriyanarayanan
மே 31, 2024 08:28

அது சரி, நில உச்சவரம்பு இருக்கட்டும், கோயிலுக்கு சொந்தமானது என்று எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் 1911க்கு முன் அரசர்கள் காலத்தில் செப்பு தகடுகள் இல்லாத நிலையில் அந்த நிலங்கள் முன்று அல்லது நான்கு கைகள் மாறிய நிலையில், பட்டா கொடுத்து, அதற்கு வரி வசூலிக்கும் இந்த அரசு மறப்போம் மன்னிப்போம் என்று மக்களுக்கு இடையுறு இருப்பது கலைய வேண்டும்.உடனடியாக மக்களின் அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். யார் தவறு செய்தார்கள் என்று ஆராயாமல் புதிய உத்தரவு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். போனது போகட்டும் 2024 ல் இந்து அறநிலையத்துறையும், வருவாய் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் நன்றி வணக்கம்


GMM
மே 31, 2024 08:02

அதிக நிலம் பல தனியாரிடம் பயனற்று இருந்தது உண்டு. 1961 நில உச்சவரம்பு ஓட்டை சட்டம் கொண்டுவந்து தேசிய காங்கிரஸ் மற்றும் திமுக. உபரி நிலம் அரசு நிலம் என்றது. அரசு துறைக்கு நிதி ஒதுக்கி, நிலம் ஒப்படைகவில்லை. மக்களிடம் ஒப்படைத்தால் அது மறு விற்பனை அரசிடம் மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும். அரசின் அபிவிருத்தி செலவுகளை ஒவ்வொரு ஆண்டும் நில விற்பனை விலையில் சேர்க்க வேண்டும். அபிவிருத்தி தான் நில விலை உயர்வுக்கு காரணம். பட்டா பத்திர பதிவு வரலாற்று விவரம் 1947 முதல் ஒவ்வொரு மாறுதலில் பதிய வேண்டும். நில அபகரிப்பு தெரிய வரும். உச்ச வரம்பு நிலத்தை விடுவிக்க, கட்டுமான நிறுவனம் வீட்டு விலை அரசு நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்.


Ethiraj
மே 31, 2024 07:33

Around 5000 flats constructed and sold to public by builders is under litigation in supreme court These construction had the approval for bank loan,layout approval and plan approval. Revenue dept,panchayat ,electricity board,metro water collected service ges Govt of TN is not regularising the land reclassification Families which invested huge money living in the flats are undergoing horrible days


Kasimani Baskaran
மே 31, 2024 05:29

பஞ்சமி நிலங்களையும் கூட அதன் உரிமைதாரர்களிடம் ஒப்படைப்பதுதான் சமூகநீதி.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி