உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவில் இறந்த தம்பதி உடலை இந்தியா கொண்டு வர உறவினர்கள் முயற்சி

அமெரிக்காவில் இறந்த தம்பதி உடலை இந்தியா கொண்டு வர உறவினர்கள் முயற்சி

புதுச்சேரி: அமெரிக்காவில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்ட புதுச்சேரி இளைஞர் மற்றும் அவரது மனைவியின் உடலை தாய் நாட்டிற்கு கொண்டுவர உறவினர்கள் போராடி வருகின்றனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,39; அமெரிக்காவில், ஒஹாயோவில் சிறை வார்டனாக பணிபுரிந்தார். இவர், 9 ஆண்டிற்கு முன் பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்த சவுமியா,31; என்பவரை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் செவிலியர் பணி பெற்று தந்தார். இந்த தம்பதிக்கு, மூன்று குழந்தைகள். இதில் இரண்டாவது மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்.சவுமியாவிற்கும் அவரது உறவினருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த, 21ம் தேதி பாலசுப்ரமணியன் தன்து துப்பாக்கியால், சவுமியாவை சுட்டு கொலை செய்துவிட்டு, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இவர்களின் மூன்று குழந்தைகளும், அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியன் மற்றும் சவுமியாவின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர்களின் குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டி இருதரப்பு உறவினர்களும் கடலுார் மற்றும் புதுச்சேரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியன் மற்றும் சவுமியா இருவரும் மரணத்திற்கு முன்னதாக, பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த ஆடியோவில், 'உறவினருடன் சவுமியாவிற்கு ஏற்பட்ட நட்பால், இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று, தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளலாம்' என்று பேசி உள்ளனர். இதனால், அமெரிக்காவில் பரிதவித்து வரும் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை