உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி தமிழ்நாடு இல்லம் ரூ.257 கோடியில் சீரமைப்பு

டில்லி தமிழ்நாடு இல்லம் ரூ.257 கோடியில் சீரமைப்பு

சென்னை:டில்லி தமிழ்நாடு இல்லத்தில், 257 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு இல்லத்தை மறு சீரமைத்து, புதிய கட்டடங்கள் கட்ட, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, 257 கோடி ரூபாய் ஒதுக்கியது.

பாலங்கள் வரைபடம்

கட்டடம் மூன்று அடித்தளங்கள், தரைதளம் மற்றும் ஏழு மேல்தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது. இக்கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியே அடிக்கல் நாட்டினார். நெடுஞ்சாலை பாலங்கள் கட்டுமானத்திற்காக, தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் துறை சார்பில், நெடுஞ்சாலை பாலங்கள் கட்டுமானத்திற்காக தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் 11 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள்

இவை புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள் வெளியீட்டால், பாலங்கள் வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான நேரம் தவிர்க்கப்படும். மாநிலம் முழுதும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்படும்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ், பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

வைகுண்டேஸ்வரன்
ஜூலை 27, 2024 19:27

கதறல்கள் படிக்க சுவாரசியம். பிரதமர் வீடு எவ்வளவு செலவு ?? ஏர் இந்தியா 1 என்கிற விமானம், பிரதமரின் கார் - என்ன விலை??


Sivagiri
ஜூலை 27, 2024 13:43

சொல்றது அரசு தமிழ்நாடு இல்லம் . . . எஸ்ட்ராவா ரெண்டு பங்களா வாங்கிப் போடத்தான் , அப்பத்தான் , எப்பவும் யூஸ் ஆகும் . . . ப.சி. பங்களா வாங்கி அந்த - சொந்த பங்களாவிலேயே தங்கி கொண்டு , அதற்கு வாடகை கட்டியதாக கணக்கு காமிச்சு மாசா மாசம் லட்சக்கணக்கில் , ஒன்றிய அரசில் , ஆட்டைய போட்ட கதை போலத்தான் . . .


velraghav
ஜூலை 27, 2024 11:09

திமுக


Rpalnivelu
ஜூலை 27, 2024 07:45

பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செலவானது 917 கோடி. சிறிய அளவிலான தமிழ்நாடு இல்ல புனரமைப்பிற்கு 257 கோடியா?


K.Muthuraj
ஜூலை 27, 2024 12:34

ஒவ்வொரு மாநில நிர்வாகமும் இவ்வாறாக ஊதாரித்தனமானவை. மக்களின் பணம் வீணடிக்கின்றோம் என்ற எண்ணமே இல்லாதவை.


R.RAMACHANDRAN
ஜூலை 27, 2024 07:02

ஆளும் அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கமும் தங்குவதற்கு சொகுசு இல்லங்கள் கட்ட 257 கோடி ரூபாய்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ