வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தொடர் சர்வே எண் கொடுப்பது கிராமத்தின் தொடர்சர்வே எண் சரி என உத்திரவிடலாம்.........
Good & Required ReformWorks
சென்னை: கிராம நத்தம் நில ஆவணங்களை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றும்போது குழப்பங்களை தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2000ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படும், பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. 'தமிழ் நிலம்' என்ற தகவல் தொகுப்பில், இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால், பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களை, 'ஆன்லைன்' வழியே பொதுமக்கள் எளிதாக சரிபார்க்கலாம்; அத்துடன் பிரதியும் எடுக்கலாம். அதுமட்டுமின்றி, கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகளின் போது, சம்பந்தப்பட்ட துறைகள், 'ஆன்லைன்' முறையில் ஆவணங்களை சரிபார்க்கலாம். இந்நிலையில், கிராம நத்தம் உள்ளிட்ட சிலவகை நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள், இன்னும், 'மேனுவல்' முறையிலேயே இருப்பதால், பயன்பாட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த ஆவணங்களையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.ஆன்லைன் முறையில், பட்டாவை பார்க்கும் இணையதளத்தில், நத்தம் நிலங்களுக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட வகை நிலங்களின் பட்டா விபரங்கள், ஆன்லைன் முறைக்கு மாறாமல் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில், நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும், வழக்கமான பட்டா நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆன்லைன் முறைக்கு மாறும்போது, ஒரே வரிசையில் சர்வே எண்கள் ஒதுக்க வேண்டிய தேவை எழுகிறது.இது குறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு கிராமத்தில், குறிப்பிட்ட நத்தம் நிலத்துக்கு, 127 என்ற சர்வே எண், 'மேனுவல்' ஆவணத்தில் இருந்து வரும் நிலையில், அதே கிராமத்தில் வழக்கமான பட்டா நிலத்துக்கும், 127 என்ற சர்வே எண் இருக்கலாம். இதில், குழப்பத்தை தவிர்க்க, நத்தம் நில ஆவணங்களை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றும்போது, கிராம அளவில் அனைத்து நிலங்களுக்கும், தனித்தனி சர்வே எண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக, குழப்பம் ஏற்படும் நத்தம் நிலத்துக்கு மட்டும், புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கிராமத்தில், புழக்கத்தில் உள்ள இறுதி சர்வே எண்ணுக்கு, அடுத்த எண்களாக புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படும். இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, சர்வே எண் குழப்பம் தீர்ந்தால், அனைத்து நில ஆவணங்களையும், 'ஆன்லைன்' முறையில் எளிதாக பார்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் சர்வே எண் கொடுப்பது கிராமத்தின் தொடர்சர்வே எண் சரி என உத்திரவிடலாம்.........
Good & Required ReformWorks