உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

சென்னை: மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில், தமிழக அரசு திருத்தம் செய்து, புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:அரசின் அனுமதியின்றி அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை பெறக் கூடாது. திருமணம் உள்ளிட்ட மத சடங்குகளின்போது, 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளைப் பெறலாம். இதை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்அரசுக்கு எதிரான கருத்துக்களை, அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஒரு அரசு ஊழியர், தனக்கான அரசு பணிகளைத் தவிர, எந்தவொரு அலுவல் சாரா கூட்டத்திற்கோ, மாநாட்டிற்கோ, தலைமை தாங்கவோ, பங்கேற்கவோ கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது அரசு ஊழியர்கள், எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்க கூடாது. எந்த அரசியல் கட்சிக்கோ, தேர்தலில் எந்த வேட்பாளருக்கோ ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர், அரசியல் கட்சி, அமைப்புகளில் இருந்தால், அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்தேர்தலில் ஓட்டு போடலாம்; ஆனால், யாருக்காகவும் பிரசாரம் செய்யவோ, வேறு வகைகளில் தலையிடவோ கூடாதுஅரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாதுஎந்தவொரு அரசு ஊழியரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவோ கூடாது. அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது, கடமைகளை புறக்கணிப்பதும், போராட்டமாக கருதப்படும்அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாதுஅரசு ஊழியர்கள் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடாது இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது அமைதிக்கு எதிரான நோக்கங்கள், செயல்பாடுகள் கொண்ட எந்தவொரு சங்கத்திலும், உறுப்பினராக இருக்கக் கூடாதுஅலுவலகத்திலும், பொது இடங்களுக்கு வரும்போதும், மது அருந்தி விட்டு வரக்கூடாதுதங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nagarajan P
மார் 06, 2025 15:49

அரசியல் வாதிகளுக்கு பென்சன் எதற்கு ஐந்து வருடத்தில் ஆயுளுக்கு தேவையானதை சேர்த்துக்கறிங்க


Kogulan
மார் 06, 2025 15:35

குறிப்பு : தி மு க வில் மட்டும் உறுப்பினராக இருக்கலாம்


Kavi
மார் 06, 2025 11:35

அம்மா தாமரை, ஐயா ராமா கிருஷ்ணன், உங்களுக்கு என்னங்க இத்தனை கோபம் கோவேர்ந்மேன்ட் ஸ்டஆஸ் மேல, இந்த கோபத்தை கொஞ்சம் அரசியல் வாதிக்கிட்ட காமிக சார், 5வர்ஷம் நாட்டையே சூறையாட்டுட்டு அப்பறம் மாதம் மாதம் பென்ஷன் வேற அவங்களுக்கு, என்னையா நியாயம் , 60 வருஷம் கோவேர்ந்மேன்ட் க்காக ஒர்க் பண்ணவர்களுக்கு பென்ஷன் கெடயாது , கேட்ட கஜானா காளியா இருக்கு எல்லாம் உன் வீட்டுல வச்சுக்கிட்டு இருந்த கஜானா என்ன இருக்கும்


Kavi
மார் 06, 2025 11:24

அம்மா தாமரை, 60 வருஷம் ஒர்க் பண்ணவர்களுக்கு பென்ஷன இல்லியேன்னு சொல்லுது இந்த கோவெர்மென்ட் 05 வருஷம் ஒர்க், மாவட்ட சையலாளர் மட்டும் பென்ஷன் இது என்ன கரெக்ட், ஆல்ரெடி அவங்க கொள்ளையடிச்சது பத்தாதுன்னு பென்ஷன் வேற மாதம் மாதம் , இது என்ன நியாயம் உங்களுக்கு


ஆரூர் ரங்
மார் 06, 2025 11:14

ஹாப்பி ஸ்ட்ரீட் நடக்கும் போது அதில் கலந்து கொண்டு ஆடலாம். அதற்குத் தடையில்லை.


Renganathan J
மார் 06, 2025 10:35

அரசு ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது போன்ற அரசு ஊழியர்களை கட்டுப்படுத்தும் ஆணைகளை பிறப்பிக்க கூடாது.


selva sekar
மார் 06, 2025 09:51

அரசு ஊழியர்கள் ஆசிரியரின் பணத்தை புடுங்கி மற்றவர்களுக்கு உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் மாத மாதம் கொடுப்பது எங்கள் பணத்தை எடுத்துக் கொடுப்பது வேதனை அளிக்கிறது எங்களுக்கு உரிய பணத்தை எங்களுக்கு தாருங்கள் அதை எடுத்துக் கொடுப்பது வெட்கக்கேடான செயல்


Oru Indiyan
மார் 06, 2025 08:44

இதற்கு பெயர் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி


gopalasamy N
மார் 06, 2025 08:36

அரசு பணியாளர்கள் தி மு க வெற்றி பெற மீண்டும் பாடுபட வேண்டும் அரசு பணியாளர்கள் கோரிக்கை அனைத்தும் 2030 நிறைவேற்ற படும் பணியாளர்கள் சந்தோசம்


RAMAKRISHNAN NATESAN
மார் 06, 2025 08:13

நான் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் தானாக வேலையிழப்புக்கு ஆளாவேன் என்பதை புரிந்து கொண்டு எந்தவித நிபந்தனையும் இன்றி இப்பணியை ஏற்கிறேன் .... எல்லோரிடமும் இதையும் ஒரு ஷரத்தாக எழுதி வாங்கிக் கொண்டுதான் வேளையில் சேர்க்கணும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை