உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் பெட்டியை உடைத்து பணம்திருடிய கொள்ளையர்கள் கைது

பைக் பெட்டியை உடைத்து பணம்திருடிய கொள்ளையர்கள் கைது

விழுப்புரம்: பைக் பெட்டியை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து வடமாநில ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்,55; இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, வங்கியில் அடகு வைத்த 15 சவரன் நகைகளை மீட்டார். அதனை தான் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்துடன் சேர்ந்து பைக் பெட்டியில் வைத்துவிட்டு, காமராஜர் வீதியில் உள்ள நகைக் கடைக்கு சென்று வந்து பார்த்தபோது, பைக் பெட்டியில் வைத்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 23ம் தேதி தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விழுப்புரம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் கிடைத்த தகவலின் பேரில், கொள்ளை வழக்கில் தேடப்பட்ட டில்லி மாநிலம், பொல்ஸ்வன் டைரி, சுவாமி சாரதானந்தா காலனி நரேந்திரகுமார் மகன் சந்தோஷ்குமார், 27, உத்தரபிரதேசம் மாநிலம், தாக்கியா ஹுசைன்ஷா கிராமத்தை சேர்ந்த மோமீன் மகன் சபாபுல்,25; ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி