உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கூரை சூரியசக்தி 10 கி.வா., வரை விலக்கு

மேற்கூரை சூரியசக்தி 10 கி.வா., வரை விலக்கு

சென்னை: வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு, மின் வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி விண்ணப்பிப்போருக்கு, மின் வினியோகம் செய்யப்படும் டிரான்ஸ்பார்மரின் திறனை ஆய்வு செய்து, பிரிவு அலுலக பணியாளர்கள் ஒப்புதல் தருவர். இதில், தாமதம் செய்வதை தடுக்க, 3 கி.வாட் வரை மின் நிலையம் அமைக்க, சாத்தியக்கூறு தொழில்நுட்ப ஒப்புதல் பெற தேவையில்லை என, இந்தாண்டு ஜனவரியில் மின் வாரியம் உத்தரவிட்டது.இதை, 10 கிலோ வாட்டாக உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மே மாதம் உத்தரவிட்டது. அதை பின்பற்றி, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தற்போது சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 10 கி.வாட் வரை விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை