உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சுகாதார துறைக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

தமிழக சுகாதார துறைக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

சென்னை : தமிழக சுகாதார கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழக சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி உதவியுடன், சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாண்டு திட்டத்தில், 2,855 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன. இதில், 1,998.32 கோடி ரூபாய் உலக வங்கியும், 856.42 கோடி ரூபாய் மாநில அரசும் அளிக்கிறது.கடந்த, 2019ல் இருந்து இதுவரை உலக வங்கியிடமிருந்து, 1,622 கோடி ரூபாய் பெறப்பட்டு, தொற்றா நோய், விபத்து சிகிச்சை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நல திட்டம், மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.இத்திட்டம், இந்தாண்டுடன் முடிவடையும் நிலையில் மீதமுள்ள, 376.46 கோடி ரூபாய் மற்றும் புதிய கட்டமைப்புகளுக்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி கோரி, உலக வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதற்காக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி ஆகியோர், அமெரிக்கா சென்றுள்ளனர்.வாஷிங்டனில் உள்ள உலக வங்கி தலைமை அலுவலத்தில், தெற்காசிய பிராந்திய துணை தலைவர் மார்டின் ரைசர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க, உலக வங்கி அதிகாரிகள் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Barakat Ali
ஜூலை 12, 2024 17:44

இந்த துட்டை கோழி அமுக்குற மாதிரி அமுக்கிப்புட்டு ஒன்றியத்தை காசு தா ன்னு கேட்போம் ..... கொடுக்கலன்னா நிதி மந்திரியை "உங்க தந்தை வீட்டு காசா?" என்கிற வார்த்தைகளையே லோக்கல் பாஷையிலே கேட்போம் .....


JANA VEL
ஜூலை 12, 2024 13:01

வருஷம் முழுசா சாப்புடலாம்


பாமரன்
ஜூலை 12, 2024 12:24

அடிப்படை மருத்துவத்தில் நாட்டிலேயே மிக முன்னேறிய நிலையில் தமிழ்நாடு இருப்பதற்கு மத்திய அரசின் பிச்சையை மட்டும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காமல் இந்த மாதிரி நிதியுதவி பெற்று நடத்தப்படும் திட்டங்கள் தான் காரணம்... இங்கே சம்பந்தமில்லாமல் உளறும் அப்ரசண்டிகளுக்கு புரியாத மேட்டர் அது...


Mohan
ஜூலை 12, 2024 12:13

பார்க்கலாம் எவ்வளவு செலவாகிறது


Mohan
ஜூலை 12, 2024 12:11

ஐ ஜாலி❤️


Mohan
ஜூலை 12, 2024 12:09

ஐ அம் வெயிட்டிங்


Lion Drsekar
ஜூலை 12, 2024 12:02

தூய்மையான காற்றும், சுத்தமான குடிநீரும் , பூச்சி மருந்தில்லாத காய் கனிகளை கொடுத்தாலே போதும் யாரும் மருத்துவமனைக்கே செல்லவேண்டாம் . வந்தே மாதரம்


ram
ஜூலை 12, 2024 11:50

சரிதான் திருட்டு திமுக ஆட்களுக்கு வெட்டு குத்துதான்


karthikeyan.P
ஜூலை 12, 2024 10:33

அவ்வளவுதான் அந்த மூவாயிரம் கோடி ஸ்வாகா


Ramesh Sargam
ஜூலை 12, 2024 08:39

அதில் மூன்று கோடி கூட மக்கள் சுகாதாரத்துக்கு பயன்படுத்தமாட்டார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை