உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் 13ல் வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் 13ல் வேலை நிறுத்தம்

மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:ஊரக வளர்ச்சி துறையில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாண்டுகளாக போராடுகிறோம். தீர்வு கிடைக்காத நிலையில், வரும் 13ல், மாநில அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளரை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !