உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு

சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில், ஏழு நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது. இன்று(ஏப்ரல் 13) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்று வித்யா பாரதி புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.

சனாதனம்

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், '' சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்'' எனக் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்புசாமி
ஏப் 14, 2024 08:59

உங்களை வேணும்னா சொல்லிக்கோங்க.


முருகன்
ஏப் 14, 2024 05:29

மக்களை பிரிந்து ஆளும் வேலையை செய்வதற்கு என்றே நாட்டில் சிலர்


ramesh
ஏப் 13, 2024 22:39

தமிழத்தில் இருந்து ராஜ்பவன்க்கு கொடுக்கப்படும் பணம் வேஸ்ட் என்று தெரிகிறது இவர் சனாதனம் என்ற வார்த்தையை எந்த மேடையிலும் பேச தவறியதில்லை இவர் அரசியல் செய்ய ஆசைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ் நாட்டில் வரப்போகும் இடைத்தேர்தலில் பிஜேபி சார்பில் போட்டி இடலாம் மேடையில் வாய் நிறுத்தாமல் சனாதன புகழ் பாடலாம்


ramesh
ஏப் 13, 2024 22:34

தமிழ் நாட்டுக்கு வந்த மோசமான ஆளுநர்களில் முதன்மையானவர் இவர்


K.Ramakrishnan
ஏப் 13, 2024 22:17

சனாதனம் சனாதனம்னு பேசியே நாட்டை பிளவுபடுத்துகிறார் இவர் பேசாமல் கவர்னர்பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் ஆன்மீகத்துக்கு போக வேண்டியது தானே


GMM
ஏப் 13, 2024 21:27

ஜனாதனம் ஏற்ற தாழ்வு அற்றது ஒரு சமூக மக்கள் பார்த்து படமாக வரையும் திறன் உலோக பொருளில் இருந்து ஆயுதம், அணிகலம் பருத்தியில் இருந்து ஆடை தயாரிப்பு எந்த ஏற்ற தாழ்வு இன்றி, சாதி பெயரிடப்பட்டது? பிரித்தாளும் ஆக்கிரமிப்பு அந்நியர் மனு பெற்று, உட்பிரிவு அதிகரித்து ஆயிரக்கணக்கான சாதியை உருவாக்கி, பாரத செல்வ வளத்தை கொள்ளையடித்தனர் காங்கிரஸ், திமுக ஜாதி கணக்கெடுப்பு, ஜனாதன எதிர்ப்பு உள்ளுக்குள் இருந்து பிரித்து சுரண்ட வாழத்தான் தான்


ramesh
ஏப் 13, 2024 22:40

பிராமணன் சூத்திரன் என்று பிரித்து வைத்தது வந்தேறி ஆரியன் தானே


Pandianpillai Pandi
ஏப் 13, 2024 21:22

ஆச்சரியமாக இருக்கிறது இவர் சட்டத்தின் பாதுகாப்பாளரா அல்லது சனாதனத்தை தூக்கிபிடிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவரா? குடியரசு தலைவருக்கு மரியாதை தராத எந்த தனமும் சரியான கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது இனி இது போன்ற பேச்சுக்ளை கவர்னர் அவர்கள் நிறுத்த வேண்டும் அப்படி தொடர்ந்தால் தைரியமாக அரசியலுக்கு வாருங்கள் உங்கள் கருத்துக்களை பரப்புரை செய்யுங்கள் ஆனால் இனிமேல் கவர்னர் பதவியில் இருந்து கொண்டு அதற்குண்டான மரியாதை கெடுத்துவிடாதீர்கள்


சண்முகம்
ஏப் 13, 2024 21:07

அரசியல் சாசனத்தை அவமதிக்கும் பேச்சு.


sundarsvpr
ஏப் 13, 2024 20:30

ஆம் தேதிக்கு பிறகு பிற மாநிங்களில் தமிழக புள்ளிகள் ஸ்டாலின் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் தொகுதிகளுக்குமட்டும் அழைக்கப்படுவர் செல்வர் யானை தன தலையில் மண்ணை வாரிக்கொண்டதுபோல் காங்கிரஸ் உணரும்


என்றும் இந்தியன்
ஏப் 13, 2024 19:01

ஐயோ இன்னைக்கி ராத்திரி தூக்கம் போச்சா


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ