உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்

சமஸ்கிருத பேராசிரியர்கள் கூறியதாவது:நாட்டில் 15 சமஸ்கிருத பல்கலைகள் உள்ளன. இவற்றின் கீழ், 1,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.கேரளாவில் 14,000 பள்ளிகளில், சமஸ்கிருதம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது. நாடு முழுதும், ஐந்து கோடி மாணவர்கள், பள்ளி பருவத்திலேயே சமஸ்கிருதம் படிக்கின்றனர். எட்டு மாநிலங்களில், பள்ளிகளில் இரண்டாம் நிலைப் பாடமாக சமஸ்கிருதம் உள்ளது. இது தவிர, நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத பாடசாலைகள், பத்துக்கும் மேற்பட்ட சமஸ்கிருத அகாடமிகள், 16 ஆய்வு நிறுவனங்கள் செயல்படுகின்றன.சமஸ்கிருத பாரதி அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அனைவரும் எளிதாக சமஸ்கிருதம் பேச, இலவசமாக பயிற்சி அளிக்கின்றன. இவற்றின் வழியாக லட்சக்கணக்கானோர் பயன் அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை