உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 80,000 முதியோருக்கு உதவித்தொகை அறிவிப்பு

80,000 முதியோருக்கு உதவித்தொகை அறிவிப்பு

சென்னை:'மக்கள் குறைகள், மனு வழங்கிய 15 நாட்களில் தீர்க்கப்படுகின்றன. விரைவில் 80,000 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு அறிக்கை:தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், முதியோர் உதவித்தொகை, 1000 ரூபாயில் இருந்து, 1200 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து, 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளில், 85,000 பேருக்கு, முதியோர் உதவித் தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் 80,000 பேருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 5337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பெறப்படும் மக்களின் மனுக்கள், 15 நாட்களில் தீர்க்கப்படுகின்றன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 18, 2024 07:03

ரூபாய் 5000 கொடுக்கும் தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் முதியோர் உதவித் தொகை வழங்குவது தான் இந்த நாட்டில் அரசின் சாதனை. மனு அளித்த 15 நாட்களில் மக்கள் குறைகள் தீர்க்கப்படுகின்றன என்பதெல்லாம் பொய்யானது. மனுக்கள் கொடுப்பவர்கள் லஞ்சம் அளித்தால் கவனத்துடன் பரிசீலிக்கின்றனர். லஞ்சம் கொடுக்காதவர்கள் மனு ஏற்கப்பட்டதாக பொய்யான பதிவு செய்து ஏமாற்றுகின்றனர். இது மத்திய அரசுக்கு மனு கொடுப்பதிலும் நடக்கிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி