உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி

ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி

ராமேஸ்வரம் : சுட்டெரிக்கும் கோடை வெயில் வெப்பத்தால் கடலுக்குள் வளரும் புற்கள் வெளியேறி ராமேஸ்வரம் கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ளன.கோடை காலமான ஏப்., மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். இக்காலத்தில் பாக்ஜலசந்தி கடலுக்குள் வளரும் கடல் புற்கள் வெப்ப சலனத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் அதுவாக பெயர்ந்து கரை ஒதுங்குவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கடலில் நிலவும் வெப்ப சலனத்தால் டன் கணக்கில் கடல் புற்கள் வெளியேறுகின்றன. சில நாட்களாக ராமேஸ்வரம் கடற்கரையில் 300 மீ., துாரத்தில் 4 அடி உயரத்திற்கு கடல் புற்கள் குவிந்துள்ளன. இதனால் மீனவர்கள் கடற்கரையில் இறங்கி விசைப்படகிற்கு சென்று வர சிரமப்படுகின்றனர். இதனை மீனவர்கள் கடல் பாசி என்றழைக்கின்றனர். சில நாட்களுக்குப் பின் தென்மேற்கு பருவக் காற்று வீசும்போது இவை கடற்கரை மேல் பரவி விடும். இதனால் கடற்கரையும் துாய்மை ஆகிவிடும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை