உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு சீல் ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு சீல் ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதிமொழி ஏற்றார். பின், அவர் அளித்த பேட்டி:இளைய சமுதாயத்தினரை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில், முதல்வர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, போதைபொருட்கள் விற்பனைக்கு எதிராக, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துக்களை தடுப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2021 முதல் இதுவரை 8.66 லட்சம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் பான்பராக், குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.அந்த கடைகளில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.86 லட்சம் கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விளைவாக, 17,550 கடைகள் மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதில், அபராத தொகையாக, 33.28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினார்.

'சீல்' வைத்த பின் என்ன?

1பெட்டி கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதல் முறை, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும். இரண்டாம் முறை, 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாம் முறை, 1 லட்சம் ரூபாய் அபராதம்; மூன்று மாதங்கள் மூடி சீல் வைக்கப்படும். அதன்பின், போலீசில் புகார் அளிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.2பெரிய கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

'சீல்' வைத்த பின் என்ன?

1பெட்டி கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதல் முறை, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும். இரண்டாம் முறை, 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாம் முறை, 1 லட்சம் ரூபாய் அபராதம்; மூன்று மாதங்கள் மூடி சீல் வைக்கப்படும். அதன்பின், போலீசில் புகார் அளிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.2பெரிய கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
ஆக 13, 2024 15:11

ஒன்று கேட்டால் இரண்டு தருவார்கள், அப்போ இரண்டு கேட்டால் ஒரு கட்டு பிடிச்சுக் கோ இது தான் இன்றைய புகையிலை யின் நிலை... தடையை எடுத்து விட்டால் குட்காவை வாங்க ஒருவனும் வரமாட்டான்.


அய்யாவு
ஆக 13, 2024 11:29

புடிபட்ட ரெண்டுகளை தூக்கில் போட்டால் மத்ததுங்க பயப்படும். சிங்கப்பூரில் இப்பிடித்தான் செய்யறாங்க.


Ramesh
ஆக 13, 2024 09:04

பின்ன என்ன பங்கு கொடுக்காமல் அவன் மட்டும் ஆட்டைய போட நெனைச்சா?


Kalyanaraman
ஆக 13, 2024 06:56

குட்கா வித்தவனுக்கு இந்த அளவுக்கு கடும் தண்டனை இருக்கு. ஆனால், கள்ளச் சாராயம் வித்தவனுக்கும், பற்பல பெயர்களில் வெளிவரும் அதிக போதை ஏற்படுத்தும் போதை வஸ்துகளை விற்பனை செய்பவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? சாராயம் விற்பவனும் போதை மருந்து விற்பவனும் திமுக பிரமுகர் என்பதால் தண்டனையில் இருந்து விலக்கு ??


மோகனசுந்தரம்
ஆக 13, 2024 06:32

பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவங்கள். சொல்வதில் ஒன்றும் கூட உண்மை இல்லை.


Mani . V
ஆக 13, 2024 05:03

இதை சப்ளை செய்யும் அரசியல்வாதிகள் மீது?


இவன்
ஆக 13, 2024 04:59

பான் பராக், குட்கா, ஹான்ஸ் லாம் போதை பொருள் சாராயம், கஞ்சா லாம் ஊட்ட சத்து மருந்து


Kasimani Baskaran
ஆக 13, 2024 04:58

மூன்று ஆண்டுகள் ஆனபின்னரும் குட்காவை ஒழிக்க மனது வரவில்லை போல தெரிகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை