உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிட்டன் தேர்தலில் ஓட்டளிக்க தமிழர்களுக்கு சீமான் வலியுறுத்தல்

பிரிட்டன் தேர்தலில் ஓட்டளிக்க தமிழர்களுக்கு சீமான் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துக்கள்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்,இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சீமான் பேசியதாவது: பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள். ஜூலை 4ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் ஓட்டுப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெற செய்ய வேண்டும்.தமிழ்ப் பேரினத்தின் ஓர்மையையும், வலிமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுங்கள். மறக்காமல் ஓட்டுச்செலுத்துங்கள். நாம் மானத்தமிழர் என்பதை உலகிற்குக் காட்டுங்கள். இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம். இலக்கை வென்றாவோம். இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 06:41

உலகில் உள்ள எல்லா தமிழர்களும் நம்ம சீமாண்டியிடம், நாம் தமிழன் தான் என்று சான்றிதழ் வழங்க அகில உலக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால உலகத்தமிழர்கள் எல்லாரும் அண்ணன் ஆபீஸ் வந்து பீஸ் கட்டி சான்றிதழ் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான தமிழனுக்கு பெருமை


ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 02:51

என்ன காரணம் என்பதை பார்க்க வேண்டும் சிலோன் தமிழன் காசு தருவதை நிறுத்தி விட்டான். அதனால பிரிட்டன் தமிழனிடம் பணம் கேட்கிறான்


Sivasankaran Kannan
ஜூலை 02, 2024 21:28

அதே இங்குள்ள தெலுகு மக்கள் என்றால் இந்த தலீவர் சொம்பை தூக்கிட்டு வந்துடுவார்.. இது தமிழ் மண்ணு, என் வாயில் bun என்று..


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 20:53

சீமான் உலக அதிபர் ஆகவேண்டியவர். அவரை தமிழகம் என்ற குண்டாச்சட்டியில் அடைக்க கூடாது. சீமான் தம்பிகளும் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீன போன்ற நாடுகளில் பாதுகாப்பு அமைச்சர்கள், நிதி அமைச்சர்களாக வரக்கூடிய அளவிற்கு தகுதி படைத்தவர்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று பிரச்சாரம் செய்து சீமானை உலக அதிபர் ஆக்குங்கள். ஏற்கனவே சீமான் சொன்னால், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் ஓடிவந்து குடியுரிமை கொடுக்கின்றன என்று சீமான் சொல்லுகிறார்.


N Annamalai
ஜூலை 02, 2024 20:42

தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு வாக்கு உரிமை இங்கிலாந்து நாட்டில் கொடுக்கலாம் .


Shankar
ஜூலை 02, 2024 20:08

அண்ணன் சொல்லிட்டார் இல்ல. இப்போ இவரோட தும்பிங்க எல்லாரும் ஒருநாள் முன்னாடியே ஓட்டுச்சாவடி வாசல்ல நிக்கப்போறாங்க. தமிழக தேர்தலிலேயே தமிழர்கள் இவருக்கு ஓட்டுப்போட தயாராயில்லை. இதுல பிரிட்டன் தமிழர்களுக்கு வலியுறுத்துறாரா?


SUBBU,MADURAI
ஜூலை 02, 2024 19:45

நல்லவேளை நம் செந்தமிழன் அண்ணன் சீமான் பொம்பளையா பிறக்காம போய்ட்டாரு ஒருவேளை அப்படி பொறந்திருந்தால் என் வயித்துல வளர்றது தலைவர் பிரபாகரனோட வாரிசுன்னு அடிச்சு விட்ருப்பாப்ல.


ஆராவமுதன்,சின்னசேலம்
ஜூலை 02, 2024 19:38

நாம்தமிழர் கட்சியின் தற்குறித் தம்பிகளுக்கு மூளை வளர்ச்சி அடைகிற வரை சீமான் காட்டில் மழைதான் அதுவரை அவருக்கு ஓட்டும் திரள்நிதியும் கொட்டோ கொட்டுன்னு கொட்டிக் கொண்டேதான் இருக்கும்.


Anbuselvan
ஜூலை 02, 2024 19:02

மறக்காம மைக் சின்னத்தில் வோட்டு போடுங்கடோய்


rama adhavan
ஜூலை 02, 2024 18:48

தேவை இல்லாத அறிவுரை. இன்னும் மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷியூஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர். அங்கெல்லாம் நாதக நிற்கலாம்.


மேலும் செய்திகள்