உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!

சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!

சென்னை: 'கோவை மாவட்டம், சூலூர் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்' என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:

* விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=apyt3ixv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு; இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். * சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்* பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.* சென்னைக்கு குடிநீர் வழங்க ஆறாவது புதிய நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே அமைக்கப்படும்.* கோவை மாவட்டம் சூலூர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும். * விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.* கடலூர், தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தொழில் மூலம் 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.* ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதனால் 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.* அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு* கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு* 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.* ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். * ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்* ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும். * புதிதாக 1,125 மின் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னைக்கு 950 பஸ்கள், மதுரைக்கு 100 பஸ்கள், கோவைக்கு 75 பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மதுரை
மார் 14, 2025 17:08

திராவிட மாடல் பட்ஜெட் விமர்சனம் சூலூர்க்கு செமி கண்டக்டரை கொடுத்து, மதுரைக்கு செருப்பை கொடுத்து, மதுரை மக்களை வஞ்சித்து விட்டது ஊராட்சி அரசு


अप्पावी
மார் 14, 2025 15:19

மதுரைல எங்கே எடம் இருக்கு? ஏற்கனவே சாக்கடைகளால் நாறுது. இன்னும் காலணி நாத்தம் வேறயா?


Bhakt
மார் 14, 2025 14:58

"சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா" > வரும் ஆனா வராது


krishnan
மார் 14, 2025 12:27

உடுமலை பேட்டை , பொள்ளாச்சி ஒதுக்க பட்டுள்ளன . வெகு அதிகமான படிப்பாளிகள் , நல்ல சுற்று புரா சூழல் உள்ள இடம் .


A.a. Bhuvanesh
மார் 15, 2025 22:54

ஊரு நல்லா இருக்குறது முடிக்கவில்லை போல்