உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண வாட்ஸாப் வசதியில் வேறுபாடு இருப்பதால் அதிர்ச்சி

மின் கட்டண வாட்ஸாப் வசதியில் வேறுபாடு இருப்பதால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழக மின் வாரியம், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை, இம்மாதம் 16ல் துவக்கியது. அதன்படி, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் இருந்து வாட்ஸாப்பில், 'வியூ தி பில்' மற்றும் 'பே தி பில்' என்று, 'லிங்க்' அனுப்பப்படுகிறது.வியூ பில் லிங்க்கை கிளிக் செய்ததும், எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது, அதற்கான கட்டணம் ஆகிய விபரங்கள் அடங்கிய ரசீதை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'பே பில்' லிங்க்கை கிளிக் செய்ததும் பணம் செலுத்தக் கூடிய யு.பி.ஐ., பக்கத்திற்கு செல்கிறது.கடந்த வாரத்தில் வாட்ஸாப்பில் கட்டண தகவல் அனுப்பப்பட்ட பலருக்கு, ரசீதில் ஒரு கட்டணமும், யு.பி.ஐ., பக்கத்தில் அதை விட, அதிக கட்டணமும் வந்துள்ளது. இரண்டில் எந்த கட்டணத்தை செலுத்துவது என தெரியாமல், குழப்பம் அடைந்துள்ள நுகர்வோர், அதிக கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாட்ஸாப்பில் மின் கட்டணம் செலுத்த அனுப்பிய தகவலில், ஒரே சமயத்தில் இரு கட்டணங்கள் எப்படி வந்தன என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் வந்ததும், வெவ்வேறு கட்டணம் சென்ற நுகர்வோருக்கு, புதிய கட்டணம் அடங்கிய தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

மோசடி எஸ்.எம்.எஸ்.,

மின் வாரியத்தின் 'எக்ஸ்' தள பதிவு:மின் கட்டண மோசடி எஸ்.எம்.எஸ்., மீண்டும் உலா வருகிறது. தற்காப்பின் சிறந்த வழி, எந்த லிங்கையும் கிளிக் செய்யாமலும், அந்த எண்ணுக்கு அழைக்காமலும் இருப்பது தான்.மின் கட்டண நிலுவை தொகையை மின் வாரிய அதிகாரப்பூர்வமான, 'tnebltd.gov.in/ Billstatus/bil...' என்ற வலைதளம் வழியாக சரிபார்க்கலாம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
மே 27, 2024 10:16

முதலில் படித்தவர்களை வேலைக்கு வையுங்கள், பல நேரங்களில் மீட்டரில் அளவிடும் மனிதர் சரியாக பதிவு செய்வதில்லை, ஒரு முறை அல்ல பல முறை நேரில் சென்று அவர் எடுத்த அளவீடும் உண்மையில் எடுத்த அளவீடும் பல ஆயிரம் ரூபாய் வேறுபாடு வருகிறது என்று நாம் மீண்டும் அவைகளை வீடியோவில் எடுத்துச்சென்று நேரில் காண்பித்து மாற்றியிருக்கிறேன், சென்ற முறை 7000 ரூபாய்க்கு வந்தது இந்த முறை 30000 ரூபாய்க்கு வந்துள்ளது, நேரில் ஒவ்வொரு முறையும் சென்று அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நாம் பாடம் எடுக்க நேரம் இல்லை, ஆகவே கண்ணால் பார்க்கும் எண்ணை பார்த்து குறிக்கக்கூட தெரியாத நபர்களை பணியில் அமர்த்தி இப்படி செய்வது மிகவும் தவறு, என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது, வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி