மேலும் செய்திகள்
கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
5 hour(s) ago | 4
முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்
7 hour(s) ago | 59
உருவானது காற்றழுத்தம்: தமிழகத்திற்கு இன்று மிதமான மழை உண்டு
11 hour(s) ago
சென்னை:அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருவது குறித்து, தமிழக அரசு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில், அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதுகுறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கேரள நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை; ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க சிலந்தி ஆற்றின் குறுக்கே, 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. விரைவில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஆகஸ்ட் 14ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
5 hour(s) ago | 4
7 hour(s) ago | 59
11 hour(s) ago