உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 70,000 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

70,000 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை:தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின், அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி:படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய, தமிழக அரசின் ஐ.சி.டி., அகாடமி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களால், 70,000 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதில், பெண்கள், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 'இன்போசிஸ்' அறக்கட்டளை வாயிலாக, 48,000 பட்டியலின உயர் கல்வி மாணவர்களுக்கு, ஐ.டி. மற்றும் ஐ.டி., அல்லாத திறன் மேம்பாட்டு பயிற்சி, மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட உள்ளது. விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் இந்திய தலைமை செயல் அதிகாரியுடன் பேச்சு நடத்தி வருகிறேன்.சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ஐ.டி., நிறுவனங்கள் அதிக அளவில் வர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை