உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டுப்பகுதியில் கைப்பற்றிய பெண்ணின் மண்டை ஓடு: டி.என்.ஏ., பரிசோதனை துவக்கம்

காட்டுப்பகுதியில் கைப்பற்றிய பெண்ணின் மண்டை ஓடு: டி.என்.ஏ., பரிசோதனை துவக்கம்

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் கைப்பற்றிய பெண்ணின் மண்டை ஓட்டுக்கு நேற்று தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஒத்தவீடு காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் பெண்ணின் மண்டை ஓடு கண்டறியப்பட்டது. அதில் சிறிய எலும்பு துண்டுகள், சேலை, பெண்கள் அணியும் ஒரு ஜோடி செருப்பு, பித்தளைச் செயின் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணைக்கு பின் நேற்று மண்டை ஓட்டினை தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிரேத பரிசோதனை பகுதிக்கு கொண்டு சென்றார்.டாக்டர் அருண்குமார், எலும்பு துண்டுகளில் இருந்து நுண்ணிய பகுதிகளை சேகரித்து டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொண்டார். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை