உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்து அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளதாக தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: வரும் 24-ம் தேதி தமிழக பா.ஜ.,குழு தமிழக கவர்னர் ரவியை சந்திக்க உள்ளது. அப்போது கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்த அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவர்னரிடம் தொலை பேசி வாயிலாக புகார் தெரிவித்து உள்ளேன்.தமிழகம் முழுவதும் பா.ஜ.வின் போராட்டம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் , போதை பொருளை ஒழிக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SP
ஜூன் 23, 2024 13:46

கவர்னர் அனுப்பிய அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதில் கவர்னரை சந்தித்து என்ன பலன்?


அ.சகாயராசு
ஜூன் 23, 2024 10:53

கவர்னரை சந்திப்பதால் ஃபோன் உயிர் திரும்பி வருமா மேற்கு வங்கம் சென்று ரயில் விபத்தை விசாரனை நடத்தி இனியும் விபத்துகள் நடைபெராவண்ணம் அரசுக்கு அறிக்கை அனுப்பலாமே ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரி போல் நடந்து கொள்ள வேண்டுகிறேன்


T.sthivinayagam
ஜூன் 22, 2024 21:50

மக்கள் மைனாரிட்டி அரசு ஆக்கிவிட்டார்கள் என்பதை மறந்து விடுகிறார் சார் புலிப்பு காட்டுவதை விடுங்க சார் என மக்கள் கூறுகின்றனர்


hari
ஜூன் 23, 2024 06:52

உங்களுக்கு 200 ரூபாயுடன் எக்ஸ்ட்ரா பேட்டா கொடுக்கவேணும் என்று மக்கள் கூறுகின்றனர்


Mega Mega
ஜூன் 22, 2024 21:44

சேரி எப்போ நீட் கொஸ்டின் பேப்பர் லீக் ஆனதுக்கு president மீட் பாணன் போறீங்க thaivare அதை சொன்ன கொஞ்சம் நல்லா இருக்கும்


Rajinikanth
ஜூன் 22, 2024 21:22

இதெல்லாம் ஒரு பிழைப்பு? கவர்னர் மட்டும் தான் இங்கு உங்க ஆள் னு ஆனா ஊம்னா அங்க ஓடிட வேண்டியது.


Satheesh Kumar
ஜூன் 22, 2024 21:50

200 உ பி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை