உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்கவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்கவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை : 'விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை; மாறாக அதிகரித்து வருகிறோம்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9qnyn2ce&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை, தெற்கு ரயில்வே குறைத்துள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. கடந்த மாதம் முதல் அனைத்து விரைவு ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது. இதற்காக, ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.எனினும், மஹாகும்பமேளா நிகழ்வுக்கு, ரயில் பெட்டிகள் தேவைப்பட்டதால், கூடுதலாக தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளையும் இணைத்து, சிறப்பு ரயில்களாக பிரயாக்ராஜுக்கு இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரித்து, ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அதன் விபரம்:ஈரோடு - சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் - ஐதராபாத், சென்னை - நாகர்கோவில், புதுச்சேரி - மங்களூரு, விழுப்புரம் - கோரக்பூர், புதுச்சேரி - கன்னியாகுமரி, சென்னை - பாலக்காடு, திருநெல்வேலி - புருலியா விரைவு ரயில்களில், தற்போதுள்ள மூன்று முன்பதிவு இல்லாத பெட்டிகள் அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரித்து இயக்கப்படும்சென்னை - திருவனந்தபுரம், சென்னை - ஆலப்புழா, சென்னை - மைசூர் விரைவு ரயில்களில், தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள், அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரிக்கப்படும்.மொத்தம், 14 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. வரும் மாதங்களில், மற்ற ரயில்களிலும், தலா நான்கு முன்பதிவு பெட்டிகள் வரை இணைத்து இயக்க, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும், தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramar P P
பிப் 23, 2025 00:16

நீங்கதான் அரசு செலவில் ஒரு பெட்டியையே புக் செய்து போகிறீர்கள்.எங்களைப்பற்றி என்ன கவலை?


theruvasagan
பிப் 22, 2025 17:20

அன்ரிசர்வ்டு பெட்டிகள்தானேன்னு நாம அலட்சியமா சொல்லிடறோம். ஆனால் அதனோட முக்கியத்துவம் தெரிஞ்சவங்க அப்படி பேசமாட்டாங்க. அதுலதானே வித்தவுட்ல பயணித்து ஒரு சரித்திரமே படைக்கப்பட்டது.


saiprakash
பிப் 22, 2025 12:36

தமிழகத்தில் இப்பொழுது சங்கிகள் போர்வையில் எட்டப்பன்கள்


RAAJ68
பிப் 22, 2025 11:38

பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய குறிப்பிட்ட ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. இடைப்பட்ட நிறுத்தங்களில் இறங்குபவர்களுக்கு அந்த வழியாக செய்யும் செல்லும் எந்த ரயிலிலும் ஏறலாம். எனவே எத்தனை பேர் நடுவழியில் இறங்குகிறார்கள் நடு வழியில் ஏறுகிறார்கள் என்று கணக்கு எடுக்க முடியாது. இவ்வளவு பேருக்குத்தான் பயணச்சீட்டு வழங்க முடியும் என்று விதி கொண்டு வந்தால் பயணச்சீட்டு வாங்காமலே பயணிப்பார்கள் இப்படி எத்தனை பேரை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வட இந்தியா மற்றும் ஒரிசா செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் எல்லோரும் இடையிடையே ஏறுகின்றனர் யாராலும் கட்டுப்படுத்த முடியாது குளிர்சாதனம் செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறி உட்கார்ந்து விடுகின்றனர் எனவே அந்த மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் எல்லாவற்றையும் முன்பதிவு இல்லாத ரயில் சேவையாக அறிவிக்க வேண்டியது தான் ஒரே வழி.


RAAJ68
பிப் 22, 2025 11:37

முன்பதிவு இல்லாத பெட்டிகள் முன்புறம் பின்புறம் மொத்தம் நான்கு உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் பயணிக்கலாம் என்றால் 400 பேர் வரை அல்லது 500 பேர் வரை உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணம் செய்யலாம். ஆனால் ரயில்வே அன்லிமிடெட் கணக்கில் பயணச்சீட்டுகள் வழங்குவது எந்த அடிப்படையில்? புறப்படும் இடத்திலிருந்தும் மற்றும் ஆங்காங்கே நிற்கும் இடத்தில் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க இஷ்டம் போல் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே வேறு வழியின்றி அவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறுகிறார்கள். அதனால் எல்லோருக்கும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை கையாள்வதற்கு முழுவதும் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட வேண்டும் அது போன்று முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.


Ray
பிப் 22, 2025 12:34

ரயில்வே அமைச்சரின் கவனம் முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதே மேலும் சில ரயில்களையாவது இயக்குவதையோ பெட்டிகளை அதிகப் படுத்துவதையோ இதற்கெல்லாம் தேவையான ட்ரைவர் கார்டு பிட்டர்கள் என்று ஊழியர்களை நியமிப்பதை பற்றியோ நினைத்துக் கூட பார்ப்பதில்லை ஏனென்றால் கடன்கார அரசிடம் அதற்கான பண்டம் இல்லை என்பதை மறைக்கவே பலவிதமான திசை திருப்பல்களை அரங்கேற்றுகிறார்கள் இங்கிருந்து ஆயிரம் கட்சி அனுதாபிகளை வாரணாசிக்கு அழைத்துப்போய் அங்கே வைத்து தமிழ்நாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்துகிறார்கள் கும்ப மேளாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து பல ரயில்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் விழா முடிந்து அவை திரும்பி வரணும்னு நேற்று மந்திரி சொல்றார்.


Kanns
பிப் 22, 2025 11:08

What Can be Expected from Useless& Stooge RulingParty Ministers& StoogeOverFattened Officials Doing Diversionary/ False Propagandas. Simply Abolish All FreePasses Concessions Quotas to RailwayStaff& MP-MLAs. ModiBJP has become Just Another CheapUseless PowerMisusing MegaLoot Party. Lets Revive Good BJP Working for Good People& Nation


T Jayakumar
பிப் 22, 2025 09:20

திருட்டு திராவிட அரசு ஒழுங்கா பஸ் விட துப்பில்லை. மத்திய அரசை குறை சொல்லுவதே வேலை


saiprakash
பிப் 22, 2025 12:34

ஹாய் சங்கி


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 08:50

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிக்கை பார்த்தவுடன் இந்தியன் ரயில்வேஸ் சுதாரித்துக் கொண்டு, "அடுத்த மாதம் முதல் ","... வரும் மாதங்களில்.." முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டப் போவதாக அறிவித்ததற்கு நன்றி. மக்களின் பிரச்னை களுக்கு என்றும் குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 22, 2025 09:28

எப்படி? சுடலை பயணம் போவது ரயிலிலா?


சுராகோ
பிப் 22, 2025 09:36

பொய் பரப்புரைக்கு ஸ்டாலின் தான் காரணமா? நல்லது யார்பண்ணியிருந்தாலும் ஸ்டாலின் தான் காரணமா? நிஜத்தில் அவர் என்ன பண்ணாலும் அவர் குடும்ப நலன் மட்டுமே இருக்கும். குடும்பம்னா மக்கள் தான் என்று மட்டும் சொல்லாதீர்கள்.


guna
பிப் 22, 2025 10:13

வழக்கம் போல டிக்கெட் எடுக்குமா போயிட போறிங்க ஆபீஸர்...


guna
பிப் 22, 2025 15:09

சரிங்க துபாய் return வைகுண்டம்


தமிழ் நிலன்
பிப் 22, 2025 08:22

திருட்டு திராவிடம் பொய் பேசுவது வழக்கம் தான்.


SRIDHAAR.R
பிப் 22, 2025 08:02

தகவல்களை முறையாக ,உடனடியாக மத்திய அரசு அனைத்து அமைச்சகங்கள் உம் விளம்பர துறை வாயிலாக சரியாக வழங்க வேண்டுகிறோம்


முக்கிய வீடியோ