உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இருந்து முதல் முறையாக நேபாளம் முக்திநாத்துக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல, 'ஏசி' ரயில் இயக்கப்பட உள்ளது.வரும் ஜூன் 6ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் இந்த யாத்திரை ரயில், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக, கோரக்பூர் வரை செல்லும். அங்கிருந்து, 'ஏசி' சொகுசு பஸ் வாயிலாக நேபாளம், பசுபதிநாத் - முக்திநாத், போகரா, மனகாமனா கோவில், அயோத்தி பாலராமர், நைமி சாரண்யம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஏசி' அல்லாத படுக்கை வசதி பெட்டியில் ஒருவருக்கு 45,900 ரூபாய் கட்டணம். மூன்றாம் வகுப்பு 'ஏசி' 54,900 ரூபாய்; இரண்டாம் வகுப்பு 'ஏசி' 59,950 ரூபாய் கட்டணம். சைவ உணவு, போக்குவரத்து கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல் பெற, 73058 58585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி