உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாறுதல் ஒன்றே மாறாதது: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் பதில்

மாறுதல் ஒன்றே மாறாதது: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் பதில்

சென்னை: அரசு முறைப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்திற்கான முதலீட்டை மீட்க 17 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல் திட்டமிட்டுள்ளார். இதன்படி இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்க உள்ளார்.முன்னதாக இரவு 8:45 மணியளவில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தன் வீட்டிலிருந்து சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு மூத்த அமைச்சர்கள், தொண்டர்கள், வரவேற்றனர்.அங்கு அவர் அளித்த பேட்டி, தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறேன். முதலீட்டை மீட்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.ஏற்கனவே துபாய், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். இதன் வாயிலாக தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளன. இதில் 17 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மூலம் ரூ. 9,99,039 கோடியில் திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 3,450 கோடி மதிப்பிலான திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன. 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்.அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி, மாறுதல் ஒன்றே மாறாதது ‛‛வெயிட் அன்ட் சி'' என்றார். ரஜினியும், துரைமுருகனும் நண்பர்கள். நகைச்சுவையை பகைச்சுவையாக பார்க்காதீர்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Matt P
ஆக 30, 2024 12:23

எனக்கு மனசு இரண்டு நாளா கஷ்டமாயிருக்கு. வரமுடியாது.-முருகன் விரைவா பவுடர் போட்டுட்டு வாங்க. இல்லாட்டி அமெரிக்கா வந்த பின் மந்திரி பதவி இருக்காது-முதல்வன் . அதான் வந்து தம்பி பக்கத்தில நிக்காரு போலிருக்கு. .


Mani . V
ஆக 28, 2024 04:46

எல்லோரும் டைரியை எடுத்து இந்த பொன்மொழியை குறித்துக் கொள்ளுங்கள். தினமும் அதிகாரிகளை மாறுதல் செய்து விளையாடுவதைத்தான் தலைவர் மாற்றமில்லாதது என்று குறிப்பிட்டுள்ளார். ஆக உங்களுக்கு புரிந்ததா?


Duruvesan
ஆக 28, 2024 02:51

17 திட்டங்கள் மூலம் 100000 கோடி கொண்டுவந்து இருக்காரு, ஆனால் 800 திட்டங்கள் மூலம் 3000 கோடி திட்டங்கள் மட்டுமே செயல் ஆகி இருக்குது


vaithilingam g dev
ஆக 28, 2024 01:01

பரெட்டை பத்த வச்சிட்டான்


vaithilingam g dev
ஆக 28, 2024 00:58

paratai patha vachita


Anantharaman Srinivasan
ஆக 27, 2024 23:46

ரஜினியை தூக்கிவைத்து முரசொலியில் எழுதியாச்சு. துரைமுருகனுக்கு நோஸ்கட். மந்திரிசபை மாற்றம் துரைமுருக தாத்தா கீழே இறங்கினாதான்.


Kasimani Baskaran
ஆக 27, 2024 23:45

பழைய மாணவர்கள் சின்னவரிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவில் கூட தூங்கமுடியாது.


Anantharaman Srinivasan
ஆக 27, 2024 23:41

அப்ப கிளம்பலேனுதான் கிளம்பிட்டார்னு சொல்லவரய்யா..??


Mr Krish Tamilnadu
ஆக 27, 2024 22:55

தமிழனாக வேஷ்டி உடன், பரவாயில்லை கோட் சூப்பர். டூர் ஸ்பெஷலா? பயண செலவு மாநில நிதி இல்லை மத்திய நிதி?அரசு அலுவல்லுக்கு என்ன விசா? டூர் விசா? இல்லை சும்மா என்னோட ஜி.கே. அப்டெட்க்காக.


ஆரூர் ரங்
ஆக 27, 2024 22:09

நரம்பு சிகிச்சைக்கு இங்கேயே உலகத்தர நிபுணர்கள் இருக்கிறார்களே.இல்லாட்டி வர்மம்?


Ravi Ravi
ஆக 28, 2024 12:16

வரம்பு மீறி சேர்த்த பணத்தை உருமாற்ற செல்வதாக உடன்பிறப்புகள் பேசிக்கொண்டார்களே உங்களுக்கு தெரியாதா


முக்கிய வீடியோ