உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம் அரசு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்

நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம் அரசு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:''தமிழகத்திற்கு 2,000 கோடி ரூபாய் இல்லை; நீங்கள் 10,000 கோடி ரூபாய் வழங்கினாலும், நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், அவர் பேசியதாவது:'மும்மொழி கொள்கையை, அதாவது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால் தான், தமிழகத்திற்கு தர வேண்டிய 2,000 கோடி ரூபாயை தருவோம்' என்று திமிராக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் புகுத்துகிற கொள்கையால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மொத்தமாக அழிந்து ஒழிந்து விடும் என்பதால், அதை நாம் எதிர்க்கிறோம். கல்விக்குள் மாணவர்களை கொண்டு வர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல் திட்டங் களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கின்றன.கல்வி தனியார்மயம், பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி, கல்வியில் மதவாதம், சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும், 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு, கல்வியில் மத்திய அரசின் அதிகார குவிப்பு போன்றவற்றுக்கு, தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் தான், உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும் என, 'பிளாக்மெயில்' செய்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதனால் தான், 2,000 கோடி ரூபாய் இல்லை; நீங்கள், 10,000 கோடி ரூபாய் வழங்கினாலும், நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறேன். தமிழகம், இவர்களின் சதிகளுக்கு எதிராக போராடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்; அராஜகவாதிகள் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். பேசிய அரை மணி நேரத்தில், அதை திரும்ப பெற வைத்திருக்கின்றனர் நம் எம்.பி.,க்கள். 'மானம் அவன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு' என, கருணாநிதி எழுதினார். அந்த தலைவரின் வாரிசுகள் என்பதை, எம்.பி.,க்கள் லோக்சபாவில் எடுத்துக் காட்டியுள்ளனர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் போல, பா.ஜ., அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல், தமிழகத்தின் உரிமைக்கு போராடுவோம் என்று நிரூபித்து இருக்கின்றனர். அங்கு, 40 பேர் என்ன செய்கின்றனர் என்று கேட்டவர்களுக்கு, நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழகத்துக்காக போராடுவோம்; இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சி நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் மக்கள் ஆதரவு தொடர வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

jaya
மார் 13, 2025 13:41

ஒரு ஆயிரமாவது அடிக்கலாமல்லவா, ஆசைதான் .


sethu
மார் 13, 2025 13:11

அப்போ என்ன


Naga Subramanian
மார் 13, 2025 06:31

சாராய வியாபாரத்தில் 2ஜி-யை விட அதிகமாக, 2லட்சம் கோடிகள் வரை புது புது உத்திகள் மூலம் அடிக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனவே. தங்களது கோட்டையில் இருந்து செங்கற்கள் பலமிழந்து வலுவிழந்து, விழப்போகிறதான செய்திகளும் ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அது தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிகவும் கவலையாக உள்ளது. தங்களது இரும்புக்கரங்களுக்கு ஏதாவது சேதம் ஆகிவிட்டதா, சூப்பர் முதலமைச்சரே மும்மொழி மட்டுமில்லாமல் வேறு வேறு வேறு எதாவது டூல்கிட் கிடைக்குமா என்று யோசியுங்க சார். ஏனென்றால் மும்மொழி டூல்கிட் தங்களுக்கு நீட் போன்று பயன்தராது. ஆகையால் மகளிர் உதவித்தொகை மாதம் ஆயிரத்துக்குப் பதிலாக 10 ஆயிரம் பாகுபாடு இல்லாமல் அனைத்து மகளிருக்கும் கொடுக்கப்படும் என்றும், இலவச பஸ் ஆண்களுக்கும் சேர்த்துதான் என்று இன்றே அறிவித்துவிடுங்கள். அதுவும் இன்று முதல் அமலுக்கு வரும் என்று கூறிடுங்கள். உங்களுக்கு தோல்வியே இல்லாமல் போய்விடும். எத்தனை அண்ணாமலை வந்தாலும் எவ்வளவுதான் கரடியை கத்தினாலும், உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விடும். இவ்வாறு செய்வதன் மூலம், 1 தேர்தல் தின பட்டிச் செலவுகள், 2 தேர்தல் ஓட்டுக்கான பணம், 3 மற்றும் 200 ரூபாய் வழங்கும் முறைக்கும் அவசியமே இல்லாமல் போய்விடும். இவ்வாறு செய்வதன் மூலம், தங்கள் கையிருப்பு கறையவே கரையாது. இலவச திட்டம் மூலம் அரசுப் பணம்தான் செலவாகும். அரசு பணத்தை வேறு வழிகளில் ஈடு கட்டி விடலாம் சார். இது தங்களுக்கான ஆக்கபூர்வமான ஆலோசனை. இன்றே செய்வீர்களா


Bala
மார் 12, 2025 22:32

தமிழக மக்கள், திருட்டு தில்லுமுல்லு தில்லாலங்கடி தீயசக்தி திமுக மாடலை இனிமேல் ஏற்கமாட்டோம் என்று முடிவெடுத்து விட்டனர்


Raghavan
மார் 12, 2025 19:47

நுணலும் தன் வாயால் கெடும் என்று சொல்லுவார்கள். அதுபோல் இவர் தன் தலையிலேயே யானை மண்ணை வாரிபோட்டுக்கொள்ளுவதுபோல் போட்டுக் கொள்ளுகிறார். இவர் பேசிய எல்லா பேச்சுக்களும் இவருக்கு எதிராக 2026 தேர்தலில் எதிர் கட்சிக்காரர்களால் உபயோகப்படுத்திக் கொள்ளப்போகிறார்கள். எல்லாம் அந்த சூப்பர் முதல்வர் வேலையாக இருக்குமோ? கூடவே இருந்து குழி கிழி பறிக்கிறார்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


Bhakt
மார் 12, 2025 19:23

நாசக்கார ஓங்கோல் குடும்பத்தால் தமிழகம் சீரழிகிறது


Bhakt
மார் 12, 2025 19:20

கெடௌட்ட்மட் DMKRuinsTN


Iniyan
மார் 12, 2025 17:15

ஆக இப்படி ஒரு அறிவிலியை தேர்ந்து எடுத்த மக்களை என்ன சொல்வது


C.SRIRAM
மார் 12, 2025 16:45

நாசகார நாக்பூர் எங்கிருந்து வந்தது ?. வேண்டுமானால் மறை கழண்ட மனிதர் அல்லது திருட்டு திராவிடர் என்று சொல்லலாம்


Chan
மார் 12, 2025 15:34

எவ்வளவு கோடி கொடுத்தாலும் DMK க்கு என்னோட வோட்டு கிடையாது


முக்கிய வீடியோ