உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜி., மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் பயிற்சி

இன்ஜி., மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் பயிற்சி

சென்னை, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கான, இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.நாடு முழுதும் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், வேலை தேடுவதை விட, தங்களின் புதிய எண்ணங்களுடன், 'ஸ்டார்ட் அப்' என்ற புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க, மத்திய அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள், உயர்கல்வி நிறுவனங்களின் வழியே வழங்கப்படுகின்றன.இதன்படி, தமிழகத்தில் உள்ள இன்ஜினி யரிங் கல்லுாரி மாணவர்கள், ஸ்டார்ட் அப் துவங்குவதற்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி, இலவசமாக வழங்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்கு வரும், 10ம் தேதிக்குள், https://bit.ly/ என்ற இணையதள இணைப்பின் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு வரும், 17ம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ