மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகி கிராமத்தில் மாடசாமி கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர், எஸ்.ஐ.,யை தாக்கி, எஸ்.பி.,யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.தேர்போகி கிராமத்தில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான மாடசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு தரப்பினராக பிரிந்து கர்ணன் தலைமையிலும், மாடசாமி தலைமையிலும் செயல்பட்டு வருகின்றனர்.நேற்று முன் தினம் இரவு மாடசாமி தரப்பினர் கோயிலில் சுவாமி கும்பிட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவிபட்டினம் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரிடம் கர்ணன் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். அப்போது இருதரப்பினரும் கல்வீசித் தாக்கினர். இதில் தேவிபட்டினம் எஸ்.ஐ., செல்வம் காயமடைந்தார்.அங்கு சென்ற சந்தீஷ் எஸ்.பி.,யிடம் தேவிபட்டினத்தில் போலீசாக பணியாற்றும் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரர் ராஜ்குமார் 36, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தேர்போகி வி.ஏ.ஓ., அன்சர் ராஜா புகாரில் தேவிப்பட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிந்தனர்.ஒரு தரப்பில் குணாநிதி 19, முருகன் 49, போலீஸ்காரர் ராஜ்குமார் 36, மற்றொரு தரப்பை சேர்ந்த கோயில் பூசாரி மாடசாமி 51, மாடசாமி 53, செந்தில்நாதன் 34, முருகன் 38, கோவிந்தன் 65 ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago