உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அட்டை கத்தி வீசுவதை நிறுத்துங்கள்; முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

அட்டை கத்தி வீசுவதை நிறுத்துங்கள்; முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்தி திணிப்பு கற்பனையின் பெயரில், அட்டை கத்தி வீசுவதை நிறுத்துங்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழகம் சகித்துக் கொள்ளாது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக எங்களது ஆன்லைன் கையெழுத்து இயக்கத்திற்கு, 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான தெரிவித்துள்ளனர் என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறேன். எங்கள் கள கையெழுத்து இயக்க பிரசாரமும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெறுகிறது. தமிழக முதல்வராக, நீங்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. எங்களது கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் சவால்கள் ஒரு பயனும் அளிக்காது. தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதிலும், நீங்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து பிரசாரத்தை நடத்த முடியவில்லை. உங்கள் கட்சியினர் உண்மையை உணர்ந்த பிறகு துண்டுப்பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிந்தி திணிப்பு கற்பனையின் பெயரில், அட்டை கத்தி வீசுவதை நிறுத்துங்கள். உங்கள் போலி ஹிந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் இன்னும் அதை உணராதது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mani Mani
மார் 08, 2025 06:05

அறிவே இல்லாத அண்ணாமலை உனக்கு தமிழ் நாடு எப்படி போனாலும் பரவாயில்லை உன்னுடைய குறிக்கோள் மத்திய அரசு பாஜக எதை சொன்னாலும் செய்தாலும் கண்முடிதனமாக சரி என்று தான் சொல்லுவ உனக்கு மாநில தலைவர் என்ற பதவி உன்னை விட்டு போக கூடாது.. தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினை அழிக்க நினைத்தா நீ முதலில் ஒரு வார்டு உறுப்பினராக ஜெயித்து காட்டு...


வரதராஜன்
மார் 07, 2025 22:03

மலை சார் இன்னைக்கு வந்துட்டீங்களா சரி உங்களுக்கு டைம் போகணும்ல. ஏதோ சொல்லிட்டு தான் இருக்கணும். சுயமாக யோசிக்கிற அளவுக்கு கூட நம்ம விட்டு இல்ல போல தெரியுது .மேல என்ன சொல்றாங்களோ அது அப்படியே ஈ அடிச்சான் காப்பியாயிட்டு ஒப்பிக்க வேண்டியதுதான் .ஒரு கூடாரமே அப்படித்தான் இருக்கும் போல இருக்கு.


orange தமிழன்
மார் 07, 2025 21:57

எங்கள் மக்கள் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது இந்திய மொழியை கற்று கொள்ள வேண்டும்....இதற்கு ANNA, அப்பா, தாத்தா, என்று யார் எதிர்த்தாலும் கவலை இல்லை.....ஜெய் ஹிந்த்... வாழ்க தமிழ்.....


C.SRIRAM
மார் 07, 2025 17:40

Stop writing nonsense comments . How can you expect exclusion of some languages?.


anna
மார் 07, 2025 17:30

This guy is using WhatsApp group to sign the petition abroad for three language policy. How BJP in particular Annamalai is using dirty tactics to push the centre agenda. The education is a state government decision and cannot be decided by central government. who are decide that three or 5 languages are good for children education? That this modern era children should be given computer education in that third option as the world is going towards digitall. Also children needs to learn economics. Sex edits important in school. Don't burden with third language as only few people go to other states for work or learn and that can be managed by English. If you think English is not our language then we cannot use anything which is not invented by us. From cellular communication, computer, YouTube etc So don't fool the public that tho English is bad. We need to use English is our official link language and remove the Hindi and use our native language locally to keep the culture intact. Hope people understand it. Annamalai can you ask the centre to remove Hindi and Sanskrit from the policy and do your ads saying that we are promoting three languages but the hormones the Hindi and Sanskrit from the policy as n option as third language. Do you have a guts to say? Three language policy they need to remove hindi


vivek
மார் 07, 2025 18:16

English pandit available for rs 200 rent. contact anna


MARUTHU PANDIAR
மார் 07, 2025 22:26

You support hypocrites there by exposing your thoughtlessness and utter lack of sense if you pretend that you are not aware of the DMK chaps making their children well versed in all languages inc.l Hindi and they nurture Hindi in their aristocratic schools by way of selling education at a fancy price. It is Hypocrites who pretend, and turn a blind eye to that.


Madras Madra
மார் 07, 2025 17:17

ஏங்க நீங்க எங்ககிட்ட இருக்குறுத தான வீச முடியும்


kr
மார் 07, 2025 17:10

Keep the GetOut campaign fresh till the state elections. It will a great impact


Mario
மார் 07, 2025 17:01

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆகா பாருங்க


Mediagoons
மார் 07, 2025 16:54

போதையில் டிரில்லியன் டாலர் மமதையில் கழுவின் மீது ஏறி உட்கார்ந்திருந்த மோடி காணாமல் போனது போல் கனவில் கற்பனையில் மிதக்கிறார் அண்ணாமலை


அசோகன்
மார் 07, 2025 16:22

அண்ணாமலை போன்ற ஒரு தலை சிறந்த மனிதர் தமிழ் நாட்டிற்கு கிடைதது அரிது..... மக்கள் எப்போது உணர்வார்களோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை