உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடைகளை குறைக்க முடியாது; குடிகாரர்களை குறைக்க வேண்டும்: அமைச்சரின் "அற்புத ஐடியா"

கடைகளை குறைக்க முடியாது; குடிகாரர்களை குறைக்க வேண்டும்: அமைச்சரின் "அற்புத ஐடியா"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னிமலை: 'டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும்' என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில் முத்துசாமி கூறியதாவது: கள்ளுக்கடை திறப்பது குறித்து எதுவும் தற்போது சொல்ல முடியாது. இது குறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைப்பது பற்றி தற்போது சொல்ல முடியாது. இதனை உடனடியாக செய்ய முடியாது. இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதற்கு மக்களை தயார் செய்ய வேண்டும். அதற்கான அணுகுமுறையை அரசு செய்து வருகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.

காலி மதுபாட்டில்

செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இது தான் முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரின் நோக்கம். சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்கிரவாண்டி தேர்தலில் 63% ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு அதை விட கூடுதலாக ஓட்டுகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Gnanam
ஜூலை 14, 2024 18:14

பல துறை ல என்ன discussion பண்ணனும்...பா


M Ramachandran
ஜூலை 14, 2024 12:18

கடைய்யகளால் வரும் வசூல் தடை படக்கூடாது. இதன் மூலம் குடிகாரர்களின் எண்னணிக்கையைக் குறைக்கமுடியும். எண்னெ அற்புத மான ஐடியா


Poongavoor Raghupathy
ஜூலை 13, 2024 18:40

The best Minister award must go to Minister Muthuswamy the Prohibition Minister he who works exactly opposite to prohibition.Why should DMK bother when Tamilnadu people always voting DMK to success


Poongavoor Raghupathy
ஜூலை 13, 2024 18:35

Minister Muthuswamy please do not call him Prohibition Minister and he must be called Tasmac liquor sales promotion Minister.


Poongavoor Raghupathy
ஜூலை 13, 2024 18:30

Minister Muthuswamy is he a Prohibition Minister or Sales Minister for Tasmac liquor sales.Muthuswamy has warned people not to call the liquor drunkards as drunkards but liquor liking people.Tamilnadu is ruined because of Tasmac liquor and people still vote for Dravidian Parties for Govt notes for votes and free bees


R.Varadarajan
ஜூலை 13, 2024 16:59

அறிவாற்றலில் சிறந்தது துரோகிட மாடல் மட்டுமே மாடல் எனும் ஆங்கல சொல்லுக்கு மாற்று தமிழ் சொல் கிடையாதோ ?


Mani . V
ஜூலை 13, 2024 15:39

மதுப்பிரியர்களை குடிகாரர்கள் என்று கேவலப்படுத்துகிறீரா?


Mani . V
ஜூலை 13, 2024 15:36

சிலருக்கு வெளியில் ஒன்றும் இல்லையென்றாலும், உள்ளே ஓரளவு மேல்மாடி வேலை செய்யும். ஆனால், இங்கு இரண்டும் யூஸ்லெஸ்.


Godyes
ஜூலை 13, 2024 14:45

குடிகாரன்களுக்கு தண்டனை கொடுத்தால் அவர்கள் குடும்பம் பாதிக்கும்.


Swaminathan L
ஜூலை 13, 2024 11:41

ஒரு புறம், தந்தை தாய் குடிப்பழக்கத்தால் சீரழிந்த குடும்பத்தில் தட்டுத் தடுமாறி வளர்ந்து முன்னுக்கு வந்து குடியை அறவே வெறுக்கும் இளைஞர்கள் கொஞ்சம்.. இன்னொரு புறம், இளஞ்சிறார்கள் பலர் குடி மற்றும் போதைப் பொருள் உட்கொண்டு சீரழியும் பேரவலம்.. பள்ளியிறுதி மாணவருக்கும் இப்பழக்கம் தொற்றிப் பரவும் அபாயம்.. தடாலடியாக மது விற்பனை அதிகப்படுத்தி, படிப்படியாக மக்களை மெதுவாக குடி மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முயற்சித்தபடி அரசு கயிற்றில் நடக்கும் வித்தை செய்கிறது. எந்தப் பக்கம் ஏகத்துக்கும் சாய்ந்தாகி விட்டது என்று அரசுக்கும் தெரியும்.


மேலும் செய்திகள்