| ADDED : ஜூலை 08, 2024 06:14 AM
கீழடி : மாநிலங்களுக்கு இடையேயான கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் பற்றி அறிய பஞ்சாப், மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்த மாணவர்கள் நேற்று கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆராய்ச்சி பகுதியையும், அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும், திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். இப்போதிலிருந்து 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் நாகரிகம், பண்பாடு, கல்வியறிவு, விவசாயம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்த இடத்தை பார்வையிட்ட, பிற மாநில மாணவர்கள் மிகுந்த ஆச்சர்யமுற்றனர்.ஏழாம் கட்ட திறந்த வெளி அருங்காட்சியகத்தில் உள்ள சுடுமண் பானைகள், உறைகிணறுகளை நேரில் கண்ட அவர்கள், பண்டைய காலத்தில் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க, மண் பாண்ட பொருட்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என, தெரிவித்தனர்.