உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச ஒலிம்பியாடில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் சீட்

சர்வதேச ஒலிம்பியாடில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் சீட்

சென்னை: சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் என்ற போட்டித்தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டு முதல், சென்னை ஐ.ஐ.டி.,யில் சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், சர்வ தேச விளையாட்டு வீரர்கள், கலைத்துறையில், 'ஏ' கிரேடு பெற்ற கலைஞர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஒதுக்கீடு, கடந்த ஆண்டு அறிமுகமானது. இந்த கல்வியாண்டு முதல், சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், சிறப்பு ஒதுக்கீடு அறிமுகமாகி உள்ளது. இயற்பியல், வேதியியல், கணிதம், தகவலியல், உயிரியல் ஆகிய ஐந்து ஒலிம்பியாட்களில், மாணவர்களின் செயல்திறன் மற்றும் சாதனைகள் அடிப்படையில், 'அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு' திட்ட இடஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன் 3ல், https://jeeadv.iitm.ac.in/scope என்ற இணையதளம் வாயிலாக துவங்கும்முக்கியமாக, கணித பிரிவினர், ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் ஏற்பாடு செய்த, சர்வதேச கணித ஒலிம்பியாட் பயிற்சி முகாம்களிலும், அறிவியல் பாடப்பிரிவினர், பாபா கல்வி மையத்தின் அறிவியல் அறிமுகப்பயிற்சி மற்றும் தேர்வு முகாம்களிலும் பங்கேற்றிருக்க வேண்டும்தகவலியல் மாணவர்கள், இந்திய கணினி அறிவியல் ஆராய்ச்சி சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச தகவலியல் ஒலிம்பியாட் பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருக்க வேண்டும். முக்கியமாக அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும்தகுதியான மாணவர்களுக்கு, விண்வெளி பொறியியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின் பொறியியல். பொறியியல் வடிவமைப்பு, இயற்பியல், இயந்திர பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் அறிவியல், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேதியியல் ஆகிய துறைகளில், பொதுப்பிரிவில் ஒன்று, பெண்களுக்கு ஒன்று என, தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும்.மேலும் விபரங்களை, https://ugadmissions.iitm.ac.in/scope என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை