உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூவர் மர்ம கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் கிடுக்கிப்பிடி

மூவர் மர்ம கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லிக்குப்பம்: கடலுார் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொன்று எரித்த வழக்கில், மூன்று நாட்களாக துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60. இவரது இளையமகன் சுமந்த்குமார், 37, ஐ.டி., நிறுவன ஊழியர். இரு மனைவியரை விவாகரத்து செய்தவர். இவரது இரண்டாவது மனைவி வழி மகன் இசாந்த், காராமணிக்குப்பத்தில் பாட்டி கமலீஸ்வரியுடன் தங்கி படித்து வந்தார்.இவர்களின் வீடு கடந்த 13ம் தேதி முதல் பூட்டியிருந்த நிலையில், 15ம் தேதி துர்நாற்றம் வீசியது. போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, வீட்டிற்குள் கமலீஸ்வரி உள்ளிட்ட மூவரும் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.எஸ்.பி., ராஜாராம் உத்தரவில், 7 தனிப்படை போலீசார், சுமந்த்குமாரின் இரண்டாவது மனைவியை நேரில் அழைத்து விசாரித்தனர். பின், சுமந்த்குமார் தற்போது வேலை செய்து வந்த ஹைதராபாத், ஏற்கனவே வேலை செய்த பெங்களூருவில் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

திடீர் திருப்பம்

தொடர் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் திணறிய நிலையில், நேற்று மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், கொலை நடந்த வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்து ஆய்வு செய்தனர். பின், வீட்டை சுற்றிலும் தடயங்களை தேடினர்.அப்போது பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக்கறை இருந்ததை கண்ட போலீசார், தடயவியல் நிபுணர்களை வைத்து, சுவற்றில் இருந்த ரத்தக்கறை மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.அதை தொடர்ந்து போலீசார், பக்கத்து வீட்டை முழுமையாக ஆய்வு செய்து சில தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அந்த குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட, நான்கு பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜூலை 18, 2024 10:01

கவலைப்படாதீங்க, நமது இரும்புக்கரம் முதல்வர் கொலையாளிகளை கண்டுபிடித்து… கண்டுபிடித்து கட்சியில் ஒரு பெரிய பதவி கொடுப்பார்…


duruvasar
ஜூலை 18, 2024 09:42

தனிபட்ட விவகாரங்களில் நடக்கும் குற்ற செயல்களை பெரிது படுத்தக்கூடாது - மூதறிஞர் மேன்மை மிகு அய்யா அப்பாவு. இந்த அரிய கருத்து காவல்துறைக்கா அல்லது பொதுமக்களுக்கா அல்லது அனைத்து தரப்பினருக்குமா என்பதை அய்யா தெளிவுபடுத்த வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 08:41

தமிழகத்தின் விடியல் வெகு தொலைவில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் தொலைக்காட்சி சேனல்களோ வீடுகளுள்ளே


kannan sundaresan
ஜூலை 18, 2024 07:23

விடியல் அரசா? சமூக விரோத செயல்கள் நாள்தோறும் அரங்கேற்றம். தமிழ்நாட்டிற்கு என்று விடிவு காலம்?


Svs Yaadum oore
ஜூலை 18, 2024 06:23

ரெண்டு கல்யாணம் பிறகு பிரிந்தார்களாம் ...அது இல்லாமல் பக்கத்து வீடு ரெண்டு பெண்கள் மற்றும் ஹைதெராபாத் வேலை பார்க்கும் இடத்தில இன்னொரு பெண் ....இதில் பத்து வயது அப்பாவி சிறுவன் மற்றும் வயதான அம்மா பலி ....இந்த கேவலமான கலாச்சார சீரழிவில் வானவில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று இந்த விடியல் ஆட்சி மேலும் சீரழியுது ...கொலை செய்து மீண்டும் ரெண்டு நாட்கள் கழித்து நிதானமாக மறுபடியும் வந்து பிணங்களை எரித்து வீட்டை பூட்டி செல்லும் அளவுக்கு போலீஸ் செயல்பாடு ..ஊரெங்கும் கொலை கொள்ளை போதை என்று படு கேவலமான ஆட்சி நடக்குது .....


வாசகர்
ஜூலை 18, 2024 13:03

இவர்களுக்கு தகுந்த பாடத்தை இனி மேலாவது தமிழக மக்கள் புகட்ட வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:04

பாஜக உள்ளே வரவில்லை என்பது ஆச்சரியம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ