உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 இடங்களில் சதமடித்தது வெயில்: 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

15 இடங்களில் சதமடித்தது வெயில்: 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மாநில அளவில், 15 மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெப்பம் பதிவானது. இன்றும், நாளையும், ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 44 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநில அளவில், 15 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.நாகை, 38; மீனம்பாக்கம், கோவை, 39; தர்மபுரி, தஞ்சாவூர், 40; திருப்பத்துார், மதுரை நகரம், பாளையங்கோட்டை, சேலம், 41; திருத்தணி, மதுரை விமான நிலையம், 42; ஈரோடு, திருச்சி, வேலுார், 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டியது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மதுரை பேரையூரில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், 22 இடங்களில், கோடை மழை பெய்துள்ளது.இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.தமிழக கடலோரம் அல்லாத 23 மாவட்டங்களில் சில இடங்களில், வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம். அதிகபட்சம், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரம், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி