உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

ரூ.45 லட்சம் முறைகேடு கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

தேனி:தேனி என்.ஆர்.டி., நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்ட கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. இங்கு உதவியாளராக முருகானந்தம் 56, பணிபுரிந்தார். இவர் அலுவலக கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தேனி கோட்ட அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நிதி பரிவர்த்தனை, காசோலை நடைமுறையில் ரூ.45 லட்சம் நிதி முறைகேட்டில் கண்காணிப்பாளர் முருகானந்தம் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவரை 'சஸ்பெண்ட்' செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ