உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட் உத்தரவு சரியே: சுப்ரீம் கோர்ட்

ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட் உத்தரவு சரியே: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், 2006 - 2014 வரை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக, ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நோட்டீசை ரத்து செய்தது.அந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இவ்வழக்கு நேற்று, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஈஷா யோகா மையத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, இதிலுள்ள விதிமீறல்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது. விதிமீறல் கட்டடங்கள் இருந்தால், அது, இயற்கை சூழலை பெரிய அளவில் பாதிக்கும். மேலும், இந்த விவகாரத்தில் கட்டடங்களை இடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போவதில்லை. ஆனாலும், விதிமீறல்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் யாருக்கும் சலுகைகள் தரக்கூடாது' என, வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சட்டத்தின் பார்வையில், அனைவரும் சமம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே, விதிமீறல் இருந்தால், யாருக்கும் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என்பதில் நாங்களும் திட்டவட்டமாக இருக்கிறோம். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை புறந்தள்ளி விட முடியாது. எனவே, உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மனு முடித்து வைக்கப்படுகிறது.ஈஷா யோகா மையம், எதிர்காலத்தில் எந்தவிதமான விதி மீறல்களிலும் ஈடுபடக்கூடாது. புதிதாக ஏதேனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான முன் அனுமதியை முறைப்படி பெற வேண்டும். தற்போது அமைந்துள்ள கட்டுமானங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என ஏதேனும் புகார்கள் வந்தால், சட்டத்திற்கு உட்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

B MAADHAVAN
மார் 01, 2025 21:38

நடக்க முடியாத முடவர்களை ஓட விட்டவரும், கண் தெரியாதவர்களை பார்க்க வைத்தவரும், காது கேட்காதவர்களை கேட்க வைத்தவருமான, உலக அதிசயங்கள் புரிந்த கருணை, காருண்யம் கொண்ட மாமனிதர் வளைத்து போட்ட பெரிய இடமும் கோவையில் உள்ளது. உண்மையான தைரியம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா..


Ramalingam Shanmugam
மார் 01, 2025 11:32

காருண்யா கருணையால் பஞ்சம் பிழைக்கும் அந்த கோஷ்டியின் கட்டுமானங்களையும் விசாரிக்குமா. இவனுகளுக்கு எதிரானவர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் கயவர் கூட்டம்.


JEBARAJ
மார் 01, 2025 10:05

விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்ற இந்த தீர்ப்பின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


Anand
மார் 01, 2025 10:45

காருண்யாவின் மேல் தான் நடவடிக்கை எடுக்கப்படும்...


vbs manian
மார் 01, 2025 10:01

ஏன் சிதம்பரம் நடராஜர் கோவில் ஈஷா மையம் திருப்பரங்குன்றம் பிரச்சினை மையங்கள் ஆகிவிட்டன. பழனி மதுரை திருச்செந்தூர் இன்று வரை தப்பித்து நிற்கின்றன. கருக திருவுளமோ. காக்க காக்க பரம்பொருளே.


Dharmavaan
மார் 01, 2025 09:48

காருண்ய மீது ஏன் ஹிந்து அமைப்புகள்,ஈஷா யோகா மையம் வழக்கு தொடரக்கூடாது இது மதவெறிப்பினால் தொடரப்பட்ட வழக்கு என்று . த்ரவிட அரசுகள் ஒழிந்தால் ஒழிய தீர்வில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 01, 2025 09:27

ஹிந்து மதத்தின் மீது காழ்ப்புணர்வுடன், திட்டமிட்டு வழக்கு தொடரப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது ........


சுந்தர்
மார் 01, 2025 09:27

அங்கு மாசு மற்ற பல இடங்களை விட கட்டுப்பாட்டுடன் இருப்பதை வாரியம் பார்த்ததிலிருந்து, அதிலுள்ள ஒரு சிலர், அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஈஷா மையத்தின் மீது வழக்கு தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாசு உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு வாரியம் செயல்பட வேண்டும். வெட்டியா வழக்கு போட்டு பணம் நேரம் விரயம் செய்யாமல் இருப்பது நல்லது.


ராம.ராசு
மார் 01, 2025 08:36

ஈஷா மையத்தில் விதி மீறல்கள் செய்திருந்தால் தப்பே இல்லை. நாட்டின் பிரதமர், உள் துறை அமைச்சர், குடியரசுத் தலைவர், நீதிபதிகளே ஈஷா மைய்யத்தில் வாடிக்கையாளராக இருக்கும்போது அந்த மையத்தின் விதி மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நியாயமானது.... சரியானது...


Balaa
மார் 01, 2025 08:17

காருண்யா கருணையால் பஞ்சம் பிழைக்கும் திருட்டு முக அந்த கோஷ்டியின் கட்டுமானங்களையும் விசாரிக்குமா. இவனுகளுக்கு எதிரானவர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் கயவர் கூட்டம்.


nb
மார் 01, 2025 07:23

reserve forest பகுதிகள், சதுப்பு நிலங்களில் ஊராட்சி, மாநகராட்சி குப்பை கொட்டுதே? மாசு கட்டுப்பாடு வாரியம் கேள்வி கேட்காதா?


சமீபத்திய செய்தி