புதுடில்லி: இந்தியாவிலேயே ஆந்திராவில் தான் 21 துணை முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். அதேவேளையில், பீஹாரைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி அதிக காலம் துணை முதல்வராக பதவி வகித்துள்ளார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் துணை முதல்வர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின் ஆகியோரை தொடர்ந்து தற்போது 3வது துணை முதல்வராக உதயநிதி இருந்து வருகிறார். இந்த நிலையில், துணை முதல்வர் பதவியில் அதிக காலம் இருந்தவராக பீகாரின் மறைந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி திகழ்கிறார். இவர், மொத்தம் 3,967 நாட்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளார். அதிக காலம் துணை முதல்வர் பதவியில் இருந்தவர்களின் பட்டியல்சுஷில் குமார் மோடி - பீஹார் - 3,967 நாட்கள்வில்பிரட் டி சௌசா - கோவா - 3,506 நாட்கள்சவ்னா மெய்ன் - அருணாசல பிரதேசம் - 3,261 நாட்கள்கேஷவ் பிரசாத் மவுரியா - உத்தரபிரதேசம் - 2,874 நாட்கடளஅஜித் பவார் - மஹாராஷ்டிரா - 2,837 நாட்கள்பிரஸ்டன் டைன்சாங் - மேகலாயா - 2,522 நாட்கள்யன்துங்கோ பட்டோன் - நாகலாந்து - 2,520 நாட்கள்சாகன் புஜ்பால் - மஹாராஷ்டிரா - 2,228 நாட்கள்டாரா சந்த், ஜம்மு காஷ்மீர் - 2,179 நாட்கள்தமிழகத்தைப் பொறுத்தவரையில் ...ஓ.பி.எஸ்., - 1353 நாட்கள்ஸ்டாலின் - 716 நாட்கள்உதயநிதி - (2024ம் ஆண்டு செப்., 29ம் தேதி முதல் தற்போது வரை)அதேபோல, ஆந்திராவில் தான் அதிக துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பவன் கல்யாண் துணை முதல்வராக இருந்து வருகிறார். இதன்மூலம், 21 துணை முதல்வர்கள் ஆந்திராவில் பதவி வகித்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் மஹாராஷ்டிராவில் 17 பேரும், கோவாவில் 16 பேரும், பீஹார், கர்நாடகாவில் தலா 13 பேரும், ஜம்மு காஷ்மீரில் 9 பேரும், அருணாசல பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா 8 பேரும் துணை முதல்வராக இருந்துள்ளனர்.