உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பொன்முடி பெருமிதம்

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பொன்முடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறப்பான திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 22ம் தேதி துவங்குகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான விண்ணப்பம் அதிக அளவில் பெறப்பட்டுள்ளது. 2,53,954 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அக்கறை

மாணவர்கள் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் நலனில் அரசு கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது.

உயர்கல்வி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்த நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பான திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

முனைவர் ஜோசப்
ஜூலை 26, 2024 07:24

நீங்க பெருமிதத்தோடு சொல்லும் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் என்னும் தீண்டத்தகாதவர்கள்


Muthu Kumaran
ஜூலை 22, 2024 15:36

But, there is no Job for Master degree holder in tamil nadu


நிக்கோல்தாம்சன்
ஜூலை 22, 2024 13:24

ஓசியில் மைக் கிடைத்தால் ஓசி அமைச்சர் எப்படியெல்லாம் பேசுவார் ?


Ramesh Sargam
ஜூலை 18, 2024 09:24

மொதல்ல முதல்வர் துண்டு சீட்டு உதவி இல்லாம தமிழ் பேசட்டும்.


Kaliraja Thangamani
ஜூலை 17, 2024 17:44

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தி , குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கும் இந்த அரசின் அமைச்சருக்கு இப்படி பேச தகுதி இருக்கிறதா? ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்தி விட்டு , பேசுங்கள்.


Kaliraja Thangamani
ஜூலை 17, 2024 17:39

செம் மண் திருடிடயவர் அமைச்சர் என்னத்த சொல்ல.


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 11:27

உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.


tmranganathan
ஜூலை 17, 2024 07:40

தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம். நீங்கள் சொல்லும் மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. இதை முதல்வரிடம் சொல்லவும். கோடியில் ஒருத்தன் தான் வேலைக்கு லாயக்கு. பல நேர்காணலில் நான் கண்ட உண்மை.


Matt P
ஜூலை 17, 2024 00:46

தமிழகமே உயர்கல்வியில் சிறந்து விளங்கும்போது ஸ்டாலின் அவர் அண்ணன் அழகிரி அழகிரி பசங்க உதயநிதி எல்லாம் உயர் கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை>? படிக்க முயற்சி செய்து கடினப்பட்டு படித்ததாலும் பெற்றோர்களின் வூக்குவிப்பினாலும் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறதென்றால் அது தான் உண்மை.


Manon
ஜூலை 16, 2024 13:09

அதெல்லாம் சரி் அசெம்பளியில் சக உறுப்பினரை 'சும்மா உட்காரிய்யா' என்பதும் மகளிரை 'ஓசி ஓசியில் பயணம்' என்று இழிவாக பேசியதும் ஒரு உயர் கல்வி துறைக்கு அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் நடவடிக்கையில் பெருமிதமா


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 11:29

முதல்ல இவரோட கல்வி தகுதி என்னென்னு சொல்ல சொல்லுங்க.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி