உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது: சொல்கிறார் சீமான்

கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது' என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. தென் தமிழகத்தை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது.

கேலிக் கூத்து

விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியை கேரளாவிடம் தமிழகம் இழந்தது. இந்தியக் கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயல்வது இந்திய ஒருமைப்பாட்டை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

திராவிடம்

காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக, தமிழக உரிமை பறிபோவதை வேடிக்கைப் பார்ப்பதும், திராவிடம், திராவிடம் என்று கூறிக்கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிடம் பறிபோகும் தமிழக உரிமையைப் பெற முடியாமல் மாறி மாறி மண்டியிட்டு அடிபணிவதும் வெட்கக்கேடானதாகும்.

புதிய அணை

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தைத் துவங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
மே 28, 2024 19:02

ஒரு மலையாளி மலையாள அரசை எதிர்த்து பேசுவது வியப்பாக உள்ளது.


krishnan
மே 28, 2024 15:48

எல்லா மாநிலமும் அணை கட்ட அனுமதித்து விட்டு, இப்போ எல்லோரும் எனக்கு தண்ணீர் தரணும்...நாண் ஒன்னும் சேமிக்க மாட்டேன் என்ற நம் அரசியல் ..கேடுகெட்டது . மழை நீர் ..வெள்ள நீர் சேமிக்க வேண்டும் . எப்படி இண்டஸ்ட்ரிக்கு ரோடு போட்டு கொடுத்தார்களோ அப்படி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்


venkatakrishna
மே 28, 2024 14:39

ஏன், சீமான் கிளம்பி அணைகட்டுவதை நிறுத்தக் கூடாது. தற்போதய கேரள அரசும் தமிழக அரசும் இணைபிரியா நண்பர்கள். ஆதலால் எந்த நடவடிக்கும் யோஜனை செய்வார்கள்.


Sridhar
மே 28, 2024 14:29

பரவாயில்லை, பாராட்டலாம். தன் சொந்த மாநிலத்துக்கு எதிராகவே பேச துணிகிறானே?


சுலைமான்
மே 28, 2024 13:45

ஆமாம்..... உன்ன மாதிரி கேரளா காரனுங்களோட சூழ்ச்சிக்கு தமிழர்கள் ஆளாக கூடாது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி