உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; நிடி ஆயோக் கூட்டத்தை தவிர்க்கும் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; நிடி ஆயோக் கூட்டத்தை தவிர்க்கும் ஸ்டாலின்

சென்னை : ''மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது முறையாக ஓட்டளித்த மக்களுக்கு, பா.ஜ., கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

ஒப்புதல் வேண்டும்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். மூன்று ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ள, சென்னை - மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக செயல்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பாலம் விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனக் கோரினேன். எதையும் நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பா.ஜ.,வை, மெஜாரிட்டி பா.ஜ.,வாக்கிய மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில், சில மாநிலங்களுக்கு மட்டும், சில திட்டங்களை அறிவித்துள்ளனர். அதையும் நிறைவேற்றுவரா என்பது சந்தேகம்தான். தமிழக மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்காமல் ஏமாற்றுவது போல, அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.தமிழகம் இரண்டு மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்துள்ளது. 37,000 கோடி ரூபாய் வரை இழப்பு கேட்டுள்ளோம். இதுவரை, 276 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டமும், பட்ஜெட்டில் இல்லை. கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

அநீதியே உள்ளது

மத்திய பா.ஜ., அரசை தாங்கிப் பிடிக்கும் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களை நிதி அமைச்சர் மறந்து விட்டார். தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. மத்திய ஆட்சியாளர்கள் சிந்தனையிலும், செயலிலும் தமிழகம் இல்லை. ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது, அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பட்ஜெட்டில் நீதி இல்லை; அநீதியே உள்ளது.ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டளிக்காதவர்களுக்கும் நன்மை செய்வதுதான் சிறந்த அரசு. அப்படித்தான் தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. இதைப் பார்த்தாவது, மத்திய அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.வரும் 27 ம் தேதி பிரதமர் மோடி தலைமையில், நிடி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், அந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட, மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம். இன்று எம்.பி.,க்கள் டில்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். தமிழக மக்கள் மீது பா.ஜ.,வினர் ஆத்திரத்தில் உள்ளனர். மத்திய அரசு திட்டங்களை, இதுவரை எப்படிக் கையாண்டோமோ, அதேபோல கையாள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழக மக்களை பாதிக்கும் பட்ஜெட்'

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அறிக்கையாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக, பீஹார் மற்றும் ஆந்திராவை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது. அரசியல் சுய லாபங்களுக்காக, குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை புறக்கணிக்கிற ஒரே காரணத்திற்காக, தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது. இது, இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவங்களை சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. பட்ஜெட் வழியாக தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள, மத்திய பா.ஜ., அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழக மக்களை பாதிக்கக் கூடியது.மொத்தத்தில் தமிழகத்தின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல, இந்த பட்ஜெட் அமைந்து உள்ளது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது, இந்திய நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
ஜூலை 24, 2024 13:41

தமிழகத்துக்கென புதிய திட்டங்கள் ஒருவேளை இல்லாமல் போகலாம்..... ஆனால் ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் தொடரத்தான் செய்கின்றன... முன்னேறிய மாநிலத்துக்கு எதற்காக அதிக உதவி / நிதி ???? இடவொதுக்கீடு போல நலிந்த மாநிலங்களுக்குத்தானே திட்டங்கள் தேவை ????


Sridhar
ஜூலை 24, 2024 13:38

இவிங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்திருச்சுன்னா அது மத்திய அரசின் கையாலாகாத்தனத்தை தான் சுட்டிக்காட்டுகிறது. அதாவது சாட்சிகள் பலமா இல்ல, ஒண்ணுத்தையும் நிரூபிக்கமுடியாத வகையில் நாங்க எல்லா கொள்ளையும் செஞ்சிருக்கோம்னு சொல்றாங்க. தேர்தலுக்கு அப்புறம் வேறவழியில்லாம சாஸ்டாங்கமா கால்ல விழப்போராங்கன்னு பாத்தா, கொஞ்சம் கூட பயமே இல்லாம சுத்திட்டுருக்கானுங்க??


xyzabc
ஜூலை 24, 2024 12:17

All the money with dmk ministers MPs mla


Sundar R
ஜூலை 24, 2024 10:39

மத்திய அரசின் எந்த திட்டம் தமிழகத்திற்கு வந்தாலும் அதை இங்குள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர். இதனால் நல்ல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டன. இதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு திட்டமும் அறிவிக்கப் படவில்லை. இதற்கும் மத்திய அரசின் மீது குறை சொல்கிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் முதுகை தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.


Ravi.S
ஜூலை 24, 2024 10:37

ஆந்திராவும் பீகாரும் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்து திட்டங்களைப் பெற்றன அதே போல் தமிழகமும் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்து ஏன் சலுகைகளை பெறக்கூடாது?


venugopal s
ஜூலை 24, 2024 16:14

இதற்குப் பெயர் தான் மாமா வேலை பார்ப்பது என்பது!


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 24, 2024 09:51

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். அப்படி என்ன ஆணவம் இந்த மத்திய ஆட்சியாளர்களுக்கு? தமிழகத்திற்கு நல்லது செய்ய மறந்தால் தமிழகத்தை ஆட்சி செய்வதையும் மறந்து விடுங்கள்.


Barakat Ali
ஜூலை 24, 2024 09:13

எனக்கு சுயபுத்தி இல்லை.. எனது / மாநில நலம் விரும்பியை பக்கத்துல வெச்சுக்கவும் மாட்டேன்.. ஆனா விடியலை நிச்சயமா தருவேன் ன்னு என்னைத்தான் மாநிலமே நம்புது ......


sankar
ஜூலை 24, 2024 09:04

உங்கள் வழக்கமான டயலாக் - "ஒரு பைசா கூட தர மனமில்லாத அரசு" - அதை சொல்லுங்க சார் - அதுக்காகத்தான் இது


Senthoora
ஜூலை 24, 2024 07:36

அப்போ 8 முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்து சொன்னது எல்லாம் பொய்யா?


சிவா அருவங்காடு
ஜூலை 24, 2024 07:28

மத்திய அரசுடன் ஒத்த போக வேண்டும். அதுதான் மக்கள் நலன்.


Senthoora
ஜூலை 24, 2024 10:15

எதுக்கு அவங்க செய்யும் அநியாயங்களுக்கா. பின்ன எதுக்கு தேர்தல் நடத்தணும், தேர்தலில் வெல்லனும். ஒட்டு யாருக்குப் போட்டாலும், ஆட்சியமைக்கும் அரசு, ஓட்டுப்போட்ட மக்கள் எல்லோருக்கும் பாராபட்சமில்லாமல் கவனிக்கணும். அதுதான் ஜனநாயகம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை