உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபையில் குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டசபையில் குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழக சட்டசபை இன்று (ஜூன் 20) சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம், இன்று(ஜூன் 20) காலை 10:00 மணிக்கு கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கராஜ், ரவிக்குமார், தனராஜ், சின்னச்சாமி, ராமகிருஷ்ணன், கணேச மூர்த்தி, சிவராமன், வேணுகோபால், இராம வீரப்பன், இந்திரி குமாரி, எச்.எம்.ராஜூ, வேலாயுதம், மலரவன், ராசம்மாள், பரமசிவம், ராமநாதன், புகழேந்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சமீபத்தில் குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. வரும் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத் தொடரில், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, தங்கள் பலத்தை காட்ட அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முனைப்புடன் உள்ளன. 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரம் குடித்து உயிரிழந்த செய்தி குறித்து அறிந்து சட்டசபை அதிர்ச்சி அடைந்தது. உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கள்ளச்சாரயம் விற்பவர்களை அரசு இரும்புகரம் கொண்டு அடக்கும்' என சபாநாயகர் அப்பாவு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
ஜூன் 20, 2024 17:31

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் சொல்லவேண்டியது தானே திருட்டு திராவிட மடியல் அரசே


Indhuindian
ஜூன் 20, 2024 16:24

கள்ள சாராயம் அருந்தியவர்களுக்கு அனுதாப தீர்மானம், இரண்டு நிமிட மௌனம், பத்து லட்ச ரூவா சன்மானம், மணி மண்டபம் மற்றும் அரசு மரியாதை செய்ய வேண்டும்.


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2024 13:16

திறனற்ற திமுக அரசின் தோல்வியால் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கும் ஒரு இரங்கல் தெரிவித்துவிட்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடையுமே. கர்த்தரின் கருனையால் ஆட்சிக்கு வந்த சபாநாயகர் அப்பாவுஊஊ அவர்கள் பரிசீலிக்க வேண்டும்


Indhuindian
ஜூன் 20, 2024 12:24

அவங்களுக்கு மட்டும்தானா கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு வெறும் பத்து லட்சம் தான தீர்மானம் கிடையாது இதுதான் சமூக நீதியா?


duruvasar
ஜூன் 20, 2024 12:08

கள்ள சாராய சாவிற்க்கு இப்போ மாண்புமிகு அய்யா அய்யாவு முட்டு கொடுப்பார் பாருங்க, அதைக்கேட்டு முரட்டு முட்டு மாதேஷ் வெட்க்கி தலை குனிந்து மும்பை சைடுக்கு ஓடிபோய் விடுவார்.


Siva
ஜூன் 20, 2024 12:06

அப்போ சாராய குடித்து இறந்தவர்களுக்கு அரசும் மற்றும் RSB Media ஒரு வாரம் மவுன விரதம்.


S. Gopalakrishnan
ஜூன் 20, 2024 11:41

வீட்டிலன் கொல்லைப்புறத்தில் சாராயச் சாவு நடக்கையில் குவைத்துக்குப் போய் விட்டார் நம் முதல் மந்திரி. அடுத்து ரஷ்யா - உக்ரைன் போரையும், இஸ்ரேல் - காஸா போரையும் நிறுத்தி நோபல் பரிசு வாங்க இஷ்டப் படுகிறார்.


M S RAGHUNATHAN
ஜூன் 20, 2024 11:29

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அனுதாப தீர்மானம் மற்றும் ₹ 10 லக்ஷம் நிவாரணம் அறிவித்தாய்விட்டதா?


Chinnathambi venka
ஜூன் 20, 2024 11:15

Appadiye Kalla Charaya Deathkum இரங்கல் Podunge


சதீஷ்குமார்
ஜூன் 20, 2024 11:13

அப்படியே கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து விட்டு இறந்த குடும்பத்துக்கு இறங்கத் தெரிவித்து இதை ஏன் மீடியாவில் வரவில்லை என்ற விவாதம் நடத்தவும் முன்பு அதிமுக ஆட்சியில் சாதாரணமாக எது நடந்தாலும் ஊதி பெரிசு செய்து இந்த ஊடகம் கோவன் எங்கே என்று சட்டசபையில் தீர்மானம் போட்டு அவரின் பற்று தற்போது அவசியம் தேவை அதனால் எல்லா ஊர்களிலும் அவர் போன ஆட்சியில் செய்த விழிப்புணர்வு தற்போது அரசு சார்பில் செய்ய தீர்மானம் போட்டு விடவும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி